ராஜூ முருகனுடன் கைகோர்கும் கவுதம் கார்த்திக் : அரசியல் நகைச்சுவை திரைப்படம் தயார்

0
41

நடிகர் கவுதம் ராம் கார்த்திக்கின் 19வது படம், புதிதாக பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்த படத்தை ராஜூ முருகனின் உதவியாளர் தினா ராகவன் இயக்குகிறார். இயக்குநர் ராஜூ முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

தென் சென்னை பின்னணியில் நகைச்சுவை கலந்த அரசியல் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதை கவுதம் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், கவுதம் கார்த்திக் தனது பெயரை இனி கவுதம் ராம் கார்த்திக் என மாற்றியுள்ளார்.

இயக்குனர் ராஜூ முருகன் அவர்கள் இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளதாலும், அவரது உதவி இயக்குனர் இந்த படத்தை இயக்குவதாலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here