இயக்குநரும், நடிகருமான மனோஜ் கே.பாரதி காலமானார்.
( 11.09.1976 – 25.03.2025)
பாரதிராஜா – சந்திரலீலா தம்பதிக்கு மகனாக பிறந்தார் நடிகர் மனோஜ்.
தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, அமெரிக்காவில் உள்ள தெற்கு ஃப்ளோரிடாவில் நாடகக்கலை படிப்பை முடித்தார்.
தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மகால்’ படம் மூலம் 1999ஆம் ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார்.

இவர் நடிப்பில் “சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா” படங்கள் கவனம் ஈர்த்தவை.
நீண்ட இடைவெளிக்கு பின் “வாய்மை, ஈஸ்வரன், மாநாடு” போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.
பாரதிராஜா இந்தியில் இயக்கிய ‘Final Cut of Director’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக விருமன் திரைப்படம் 2022ல் வெளியானது.
இவர் இயக்கத்தில் ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் 2023ல் வெளியானது.
அண்மையில் இவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 48 வயதில் நடிகர் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா திடீரென காலமானார்.
அவரது இறப்புக்கு இயக்குனர் விக்ரமன், இயக்குனர் ஆர்.கே செல்வமணி, வெற்றிமாறன், ரஞ்சித், மாரி செல்வராஜ்; நடிகர்கள் கார்த்திக், சிலம்பரசன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here