இந்தாண்டு தீபாவளி ரேஸில் 3 படங்கள் மோத உள்ளன.
தீபாவளிக்கு முன்னதாகவே நாளை மறுதினம் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’, அக்டோபர் 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ ஆகிய படங்கள் வெளியாகின்றன.
ரஜினி படத்துடன் போட்டி போட வேண்டாமென ‘கங்குவா’ படம் போட்டியிலிருந்து விலகியது. அந்தப் படம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’, ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ ஆகிய 2 படங்கள் தீபாவளி வெளியீடு என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்போது கவின் நடிக்கும் ‘பிளடி பெக்கர்’ படத்தையும் தீபாவளிக்கு வெளியிடுகிறோம் என நேற்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதனால், இந்த வருட தீபாவளிக்கு ‘டாப்’ நடிகர்களின் படங்கள் வராமல் அடுத்த கட்ட நடிகர்களின் படங்கள்தான் வெளியாக உள்ளது.


இது தமிழ் சினிமாவில் புதுமையான ஒன்று. வழக்கமாக முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் தான் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் வெளியாகும். ஆனால் இந்த முறை வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் மற்றும் அடுத்த கட்ட நடிகர்களின் படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இது அடுத்த கட்டத்திற்கு தமிழ் சினிமாவை நகர்த்தி செல்லும் என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கவின் ஆகியோர் தான் மோத உள்ளனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here