தனுஷின் ராயன் திரைப்படம் அவருக்கு 50வது திரைப்படமாக அமைந்துள்ளது. இதை அவரே இயக்கி கலக்கியிருக்கிறார். இந்த படம் உலக லெவலில் 107 கோடிகளும், தமிழ்நாட்டில் மட்டும் 80 கோடிகளும் கலெக்சன் செய்து சன் டிவிக்கு ஒரு கணிசமான தொகையை வாங்கி தந்துள்ளது.
இதனால் சன் டிவி ஹேப்பியாக இருக்கிறது. ஏற்கனவே தனுஷ் 2017 ஆம் வருடம் பா பாண்டி படத்தை இயக்கி அசத்தி இருந்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்பொழுது “ராயன்” சினிமாவை தொடர்ந்து “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்னும் படத்தையும் இயக்க உள்ளார்.
சன் டிவி தயாரித்த இந்த ராயன் படத்திற்கு ஆன செலவு என்று பார்த்தால் அது தனுஷின் சம்பளம் மட்டும் தான். அதையும் அவர்கள் டீல் செய்து சமாளித்து விட்டார்கள். தனுசுக்கு சம்பளமாக இந்த படத்திற்கு 2 தவணைகளாக 40 கோடிகள் வரை பேசி தந்துள்ளனர்.

ராயன் ஆடிய, ஆடப்போகும் அசுர வேட்டை
சன் டிவி ராயன் படம் தயாரிப்பதற்காக 80 முதல் 90 கோடிகள் வரை செலவு பண்ணியுள்ளது இப்பொழுது இது வரை வசூலித்தொகை மட்டும் ஏறத்தாழ 107 கோடிகள். இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது சன் டிவி. இருந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தனுஷ் மீது தயாரிப்பு சங்கத்தினர் தற்போது ரெட் கார்ட் போட்டுள்ளனர் .
தனுஷ் அடுத்ததாக டைரக்ட் செய்யும் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்திற்கு “நீக்” என்று ஆங்கிலத்தில் பெயர் சூட்டியுள்ளார்கள். இந்த படத்தை முடித்த பிறகு மறுபடியும் தங்களுக்கு ஒரு படம் இயக்குமாறு தனுஷிடம் சன் டிவி கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கும் தனுஷ் OK தெரிவித்துள்ளார். இப்பொழுது தனுஷ் இயக்கி நடிப்பதில் அசுர வேட்டை ஆடி கொண்டு வருகிறார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here