Goat First Single : வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் நடிகர் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

சமீபத்தில் தான் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனை அடுத்து தற்போது ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் கோட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஒரு சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜய் ஸ்கேட்டிங் சைக்கிள் ஓட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது அந்த வீடியோ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது.
நேற்று இப்படத்தின் புதிய அப்டேட்டை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். செப்டம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை கோட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக் குழுவினர். அந்த போஸ்டரில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கண்ணாடி அணிந்தபடி நடிகர் விஜய் யை காண முடிந்தது.
Goat First Single
இதனை அடுத்து நேற்று இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கமான எக்ஸில் நாளை சம்பவம் உறுதியான பதிவிட்டு இருந்தார். அதாவது இன்று 14 4 2023 இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோட் படத்துடைய ஃபர்ஸ்ட் சிங்கிள்ஸ் வெளியாக உள்ளது. விஜய் ரசிகர்கள் அனைவரும் இதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here