அஜித் ரசிகர்களுக்கு நல்ல செய்தி.. குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி அப்டேட்

0
68

அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள அஜித்தின் நடிப்பில் தற்போது 2 திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் மற்றும் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் அஜித் நடித்து வருகிறார்.

அப்டேட்

இதில் விடாமுயற்சி ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான ஷூட்டிங்கையும் துவங்கினர் அஜித். இந்த நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பில் ஆக்க்ஷன் சீன்கள் படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் அஜித் இணைந்துள்ளார்.

தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீசாகும் என தெரிவிக்கின்றனர். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. கண்டிப்பாக அடுத்த வருடம் பொங்கலுக்கு குட் பேட் அக்லி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாகவே தெறிவித்துவிட்டனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here