Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

ஜெயம் ரவி மனைவி ஆவேசம் : கணவர்- மனைவிக்கு இடையே நுழைந்த அந்த நடிகர் யார்? 

கடந்த 2009ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி தனது காதலியான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.…

கடந்த 2009ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி தனது காதலியான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

இந்நிலையில், விவாதத்துக்கும் எனக்கு சம்பந்தம் இல்லை, எனக்கு தெரியாமல் எனது ஒப்புதல் இல்லாமல் ரவி விவகாரம் அறிவிப்பை வெளியிட்டார் என்று குற்றச்சாட்டை மனைவி ஆர்த்தி கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்த்தி விளக்கம் 

மேலும், மனைவி ஆர்த்தி கூறியதாவது, விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு:

 “விவாகரத்து தொடர்பாக தன்னிடம் எதுவும் கருத்து கேட்காமல் ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு என் கவனத்திற்கு வராமல், என் ஒப்புதல் இல்லாமல் பிரிவை அறிவித்துள்ளார் என்பதை தெளிவுபடுத்துகிறேன்” 

இது அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

கணவர் ரவியுடன் மனம் விட்டுப் பேச கணவரை சந்திக்க நான் பலவித முயற்சிகள் செய்தேன்

Advertisements

என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் பொதுவெளியில் தாக்குதல்களை எதிர்கொள்கிறேன்.

ஒரு தாயாக எனக்கு எப்போதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முக்கியத்துவம் வாய்ந்தது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது.

இந்த கடின காலத்தை நாங்கள் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பது என் கடமை – ஆர்த்தி ரவி.

இருக்குமோ?

ஜெயம் ரவி – ஆர்த்தி ரவி இடையே விரிசல் ஏற்படுவதற்கு அந்த நடிகர் காரணமாக இருக்கலாம் என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here