நடிகர் விஜய் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் 2 பேரும் இணைந்து இதுவரை 2 திரைப்படங்களில் நடித்துள்ளனர். இதில் பைரவா படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் . இப்படத்தின் ஷூட்டிங்கின் போது தான் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநட்டி (நடிகையர் திலகம் ) திரைப்படத்தின் ட்ரைலரை விஜய்க்கு காட்டியுள்ளார்.
அப்போது அதை பார்த்த பிறகு, இதற்காக உனக்கு தேசிய விருது கிடைக்கும் என விஜய் சொன்னாராம். அதனை ஒரு வாழ்த்தாக எடுத்துக்கொண்டு, அப்படியே விட்டுவிட்டார் கீர்த்தி சுரேஷ். ஆனால், விஜய் கூறியது போலவே மகாநட்டி (நடிகையர் திலகம்) திரைப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

இப்படத்திற்காக நீ தேசிய விருது வாங்குவாய் என என்னிடம் சொன்ன முதல் நபர் விஜய் சார் தான் என அண்மையில் கொடுத்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here