மிகவும் தகாத வார்த்தை.. ஹாட் ஸ்பாட் 18+ திரைப்படமா? வலுக்கும் கண்டனம்!

0
593
hotspot movie
hotspot movie

hotspot movie : ஆண் பெண் உறவில் கூறப்படாத பக்கங்களைப் பற்றி பேசக்கூடிய படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ஹாட்ஸ்பாட். இப்படத்தின் டிரையில் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் மிகுந்த சலசலப்பை உண்டாக்கியது. 18+ திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படம் மார்ச் 29 ந் தேதி திரையரங்கில் ரிலீசாக போகும் இப்படத்தை நெட்டிசன் திட்டி தீர்த்து கொண்டுள்ளனர். கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்களின் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் சேர்ந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ஹாட் ஸ்பார்ட். இப்படத்தில் கலையரசன், 96 பட ஆதித்யா பாஸ்கர், மற்றும் கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

hotspot movie
hotspot movie

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர்சமீபத்தில் வெளியானது. அந்த டிரைலரில் முழுக்க முழுக்க கெட்ட சொற்களையும், உடலுவு பற்றியும், பொது இடத்தில் பேச வெட்கப்படும் பல விஷயத்தை அப்பட்டமாக காட்சி படுத்தி இருக்கிறார் இயக்குநர். இந்த டீசரைப் பார்த்த நெட்டிசன்ஸ் 18+ திரைப்படமா இது, என்ன கன்றாவி படம் என்றும் மோசமாக திட்டி தீர்த்து கொண்டுள்ளனர்.

hotspot movie

இப்படம் மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் இப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன்- வான் இசையமைக்கிறார்கள். ஒளிப்பதிவை கோகுல் பினாய் செய்கிறார் முத்தையன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டு இருக்கிறார். இப்படத்தை சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் வெளியிடுகிறார்

hotspot movie

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் கலையரசன் பேசிய போது, இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியான போதே பலர் பேர் போன் செய்து திட்டினார்கள். ஆனால், முழு படத்தையும் பார்த்தால் தான் உங்களுக்கு இதன் அர்த்தம் தெறியும்.

விக்னேஷ் கதை சொல்லும் விதம் மாறுபட்டு உள்ளது.ஆனால் அது சென்று அடையும் இடம் சரியாக இருக்கும். என் கதை மட்டுமே எனக்கு தெரியும். ஆனால் விக்னேஷ் மீது நம்பிக்கை உள்ளது. யுவர்ஸ் ஷேம்ஃபுலி என சீரியல் எடுத்தார். அதுவும் இந்தபோல, அலைகளை உண்டாக்கியது ஆனால், அது முடியும் போது நம்மை மிக அழகாக சிந்திக்கும் படி செய்யும் என்றார்.

இதில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசும் போது , ஹாட் ஸ்பாட் படத்தை என் நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ளனர், அதற்கு அவர்கள் மீது நான் வைத்த நம்பிக்கை தான், அதே போல் அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்தார்கள், அவர்களுக்கு என் மனமார்த்த நன்றி. இப்படத்தில் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் என் கதையை நம்பி மட்டுமே நடித்துள்ளனர். யுவர்ஸ் ஷேம்ஃபுலி எனத் தொடர் எடுத்தேன் அது உண்டாக்கிய எதிர்வினைகளைத் தான் இந்தப்படமும் உண்டாக்கும் என்ற நம்பிக்கைக்கை எனக்கு உள்ளது. சரியில்லாத கருத்தைச் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமுடன் பணி செய்துள்ளோம். உங்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும் என்று பேசி உள்ளார்.

இதையும் படிங்க : நயன்தாரா சிறிதளவும் மாறவே இல்லை: நடிகை மாலா பார்வதி நெகிழ்ச்சி

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here