80களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் கண்களாலேயே கவர்ச்சியை காட்டி கிறங்கடித்தவர் என்று கூறலாம். சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டை பெறுவதற்கு தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நின்றனர்.
அந்த அளவுக்கு சில்க் ஸ்மிதா பிஸியான நடிகையாக வலம் வந்தார், 1996 -ம் வருடம் வீட்டில் தற்கொலை பண்ணிக்கொண்டார். தற்போது வரை இவரின் மரணம் மர்மமாகவே இருக்கிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் G.M குமார், நடிகை சில்க் ஸ்மிதா பற்றி பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சில்க் ஸ்மிதாவை போல ஒரு தங்கமான பொண்ணே கிடையாது. சில்க் ஸ்மிதா ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை தேடிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் நடிகை பல்லவியோடு நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். இல்லையென்றால் சில்க் ஸ்மிதாவை நானே காதலித்திருப்பேன் என்று G.M .குமார் தெரிவித்தார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here