சிம்பொனி இசை நிகழ்ச்சியால் வெடித்த சர்ச்சை : யார் சொல்வது உண்மை?

0
102

சிம்பொனி இசை நிகழ்ச்சி தான் தமிழ்நாட்டு மக்களிடையே கடந்த ஒரு வாரமாக பேசும் பொருளாக உள்ளது. தற்போது அதில் சர்ச்சை என்னவென்றால் சிம்பொனி இசையை வெற்றிகரமாக வெளிநாட்டில் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் முடித்து நாடு திரும்பி உள்ளார்.

இதையெடுத்து லிடியன் நாதஸ்வரம் என்ற 20 வயது இளைஞர் தானும் சிம்போனி நிகழ்ச்சியை அரங்கேற்றப் போவதாக அறிவித்தார். இதில் இருந்து தான் சர்ச்சை கிளம்பியது.

பல்வேறு இசை ஜாம்பவான்கள் இந்தியாவில் இருக்க, தமிழ்நாட்டிலும் இருக்க ஆனால் 20 வயதான இளைஞர் சிம்போனி நிகழ்ச்சியை இளையராஜா அவர்களுக்கு அடுத்து நிகழ்த்த உள்ளதாக செய்தி வெளியான நிலையில் அனைத்து ஊடகங்களும் இதைப்பற்றி தான் பேசின.

இசைஞானி இசை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இளையராஜா லண்டனில் தனது சிம்பொனியை அரங்கேற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் இளம் இசை கலைஞரான லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி அமைக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில் அவர் இசையமைத்திருப்பது சிம்பொனி இசை இல்லை என இளையராஜா பேசியது சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை பெற்றது.

இளையராஜா Vs லிடியன்:-

இளையராஜாவைப் போல் தானும் சிம்பொனி இசையை வெளியிட இருப்பதாக அவரிடம் இசைப் பயின்ற மாணவனும், இசைக் கலைஞருமான லிடியன் நாதஸ்வரம் சமூக வலைதளங்களில் கூறி இருந்தது வைரல் ஆனது. அதேபோல் இளையராஜா, லிடியனின் சிம்பொனி இசைக்கு உதவியதாகவும் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில், இதுபற்றி இளையராஜாவிடமே கேட்கப்பட்டது, அதற்கு அவர், லிடியன் என்னிடம் இசை கற்க வந்தவர்.

ஒரு முறை தான் சிம்பொனி இசையை உருவாக்கி இருப்பதாக சொல்லி போட்டுக்காட்டினார். 20 விநாடி கேட்டதும், இது என்ன சினிமா பின்னணி இசை மாதிரி இருக்கு. இது தப்பாச்சே… இது சிம்பொனியே இல்லை. முதலில் முறையாக சிம்பொனி என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு கம்போஸ் செய் என்று சொன்னதாக இளையராஜா கூறினார்.

லிடியன் விளக்கம்:-

இதனால் பதறிப்போய் லிடியனும் விளக்கம் கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இளையராஜா அங்கிள் என்னுடைய குரு. அவர் சொன்னது உண்மை தான். சிம்பொனி பற்றி அவரிடம் நிறைய பேசி இருக்கிறேன். அப்போது நீயும் கற்றுக்கொண்டு முறையாக சிம்பொனி இசையை அரங்கேற்றி நிறைய விருதுகளை பெற்று பெற்றோருக்கு பெருமை சேர் என்று என்னிடம் சொன்னார். அவர் எப்போது ஹானஸ்ட் ஆனவர். மனதில் எதையும் வைத்துக் கொண்டு பேசமாட்டார். வெளியில் அப்படி தெரிந்தாலும் அவர் உண்மையில் அப்படி இல்லை என லிடியன் தெரிவித்தார்.

இளையராஜா திமிரு :-

இந்த விவகாரம் குறித்து சிலர், இளையராஜா அவர்கள் தலைக்கனத்தில் பேசுகிறார். நான் தான் இசையில் உச்சத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இப்படி பேசுகிறார் என்று விமர்சித்து வருகிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here