மலையாள படஙக்ளில் நடித்து கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை அடுத்து ரஜினிமுருகன், ரெமோ, சீமராஜா, தொடரி, சண்டக்கோழி 2, சர்கார், பைரவா, சாணிக் காகிதம், மாமன்னன் மற்றும் சைரன் எனப் பல திரைப்படங்களில் நடித்துள்ளர். தற்போது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ரகு தாத்தா படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது.

பதிலடி
நடிகை கீர்த்தி சசுரேஷ் அவரது நண்பரை கல்யாணம் செய்ய கொள்ள போகிறார் போன்ற வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இவர் தன் மீது வந்து கொண்டிருக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், பாராட்டுக்களை எப்படி மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோமோ அதே போல விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.
என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு, என் குடும்பத்தார் குறித்து இல்லாத விஷயங்களை நடந்தது போல கதை கட்டி பேசுவதை நான் 2 காதுக்குள் போட்டுக் கொள்ளவே மாட்டேன். நடிகர் விஜய் சொல்லியது போல, உண்மைக்கு விளக்கம் அளிக்கலாம், ஆனால், வதந்திக்கு விளக்கம் அளித்தால் அது உண்மையாகிவிடும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here