கதையில் லாஜிக் இல்ல, கதையை இல்லாத பிரம்மாண்டம்.. அமீர் இந்தியன் 2 படத்துக்கு கொடுத்த விமர்சனம்

0
173

Indian 2- Ameer: இன்று உலகம் முழுவதும் இருக்கும் திரையரங்குகளில் ரிலீசாகி இந்தியன் 2 படத்தின் விமர்சனங்கள் தான் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்தியன் 2 கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதற்கு காரணம் அதிகமான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இந்தியன் 2 படத்தின் மேல் இருந்ததால். அதிலும் பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற சங்கர் இயக்குகிறார் என்றால் கதைக்கு ஏற்ற வகையில் துணிச்சலுடன் தவறு செய்தவர்களை தோலுரித்துக் காண்பிக்கும் விதமாக இருக்கும்.

ஆனால் இந்தியன் 2 படம் சிறிது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்றே கூறலாம். அதிலும் நடிப்புக்காக எந்த ஒரு எல்லை தாண்டி சென்று கதாபாத்திரத்தை தத்ரூபமாக நடிக்கக்கூடிய கமல் இதில் சொல்லிக் கொள்ளும் லெவலிற்கு பெயர் எடுக்கவில்லை. அத்துடன் இதில் எதிர்பார்த்தது போல காட்சிகளும் பெரிசாக மக்களிடம் சென்றடையவில்லை.

இந்தியன் 2 படத்திற்கு அமீர் கூறிய விமர்சனம்

அதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சியை எதிர்க்க முடியாத காரணத்தால் பல விஷயங்களை மூடி மறைத்து ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தது போல கதையை எடுத்த மாதிரி ஒரு உணர்வை உண்டாக்குகிறது. அதனால் தான் இது சங்கர் படமா என்று யோசிக்க தோன்றும் அளவிற்கு காட்சிகள் உள்ளது. இப்படி இந்தியன் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரும் நிலையில், கடைசியில் இந்தியன் 3 க்கும் சில காட்சிகளை அமைத்து லீடு கொடுத்திருக்கிறார்.

அதையும் பார்க்கும் பொழுது அந்த அளவிற்கு மக்களிடம் ஈர்க்கவில்லை. முக்கியமாக இந்தியன் படத்திற்கு மிகவும் உயிரோட்டமாக அமைந்தது ஏ ஆர் ரகுமான் இசை. ஆனால் இதில் இவருக்கு பதிலாக அனிருத் இசை அமைத்திருந்தாலும் இந்த படத்திற்கும் காட்சிக்கும் அது பொருந்தவில்லை என்று நினைக்க தோன்றுகிறது. இதனை தொடர்ந்து கமலின் தோற்றத்தை பார்க்கும் பொழுது ஒரு சீரியசான கதாபாத்திரமாகவே தெரியவில்லை.

இப்படி எதையுமே ஒத்துப் போகாத மாதிரி நிறைய நெகட்டிவ் விஷயங்கள் இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் அமீர் கூறிய விமர்சனம் என்னவென்றால் லாஜிக்கே இல்லாத கதை மற்றும் கதையே இல்லாத பிரம்மாண்டம். கமல் என்னும் பிறவிக்கலைஞனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த வகையில் மக்களுக்கு மட்டுமில்லாமல் யாருக்குமே இந்தியன் 2 படம் ஏற்றுகொள்ளுபடி இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதில் இந்த படத்தை 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இப்படத்திற்கு வரும் விமர்சனங்களை வைத்து பார்த்தால் போட்ட காசை கூட எடுப்பாங்களா என்பது சற்று சந்தேகமாக தான் இருக்கிறது.

கடைசியாக கமல் நடிப்பில் ரிலீசான விக்ரம் படத்தின் விமர்சனத்திற்கு அப்படியே எதிர் மாறாக இந்தியன் 2 படத்திற்கு கிடைத்துள்ளது. இது போலவே சென்றால் இனி கமலின் படங்கள் எந்தளவிற்கு மக்களிடம் சென்றடையும் என்பது ஒரு கேள்விக்குறியை உண்டாக்குகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here