கமலின் இந்தியன் 2
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை ஷங்கர் இயக்க லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற இப்படம் ஜூலை மாதத்தில் பிரமாண்டமாக வெளியாகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. சிம்பு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற பல திரையுலக நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஸ்ருதி – கமல்

இசை வெளியீட்டு நிகழ்ச்சி மேடையில் தனது உரையை முடித்தபின், கமலிடம் சில கேள்விகளை தொகுப்பாளர் நடிகர் சிவா கேட்டார். அதில் ‘இந்த விழாவை கண்டு கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்தியன் தாத்தா என்ன சொல்ல விரும்புகிறார்’ என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு “சொல்லிட்டாரு, இப்போ தான் சொன்னது தான். என் மகள் ஸ்ருதி ஹாசன் மனசு வைத்து இருந்தால் நான் இப்பவே தாத்தா தான்” என மகள் திருமணம் பற்றி பேசியிருந்தார். இதற்கு மேடைக்கு கீழே அமர்ந்திருந்த ஸ்ருதி ஹாசன் வேண்டவே வேண்டாம் என்பது போல் தலையாட்டி கொண்டிருந்தார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here