படத்துக்கு கூட்டமே இல்லை : சீனு ராமசாமி வேதனை  

0
242

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி ‘இடிமுழக்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த அந்த படம் ரிலீஸாகவில்லை. இதையடுத்து அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் ‘கோழிப்பன்னை செல்லதுரை’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் “பவி டீச்சர் புகழ்” பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் இணைந்து தயாரித்த இந்த படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் படத்திற்கு கூட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை.  இதனால் படக்குழுவினர் வேதனையில் உள்ளனர். 

‘கோழிப்பன்னை செல்லதுரை’ இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் படக்குறித்து பேசியதாவது, “என் படம் உங்களுக்கு பிடிச்சா ஸ்டேட்டஸ் வைங்க, பிடிக்கலேன்னா இன்பாக்ஸில் திட்டுங்க..,” 

“கோழிப்பன்னை செல்லதுரை” படத்தை நான் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியிடுவேன் என்று சொன்னபோது யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால், 20ஆம் தேதி, என் படம் வெளியாகும் அதேநாளில், என் படம் உட்பட 7 படம் வெளியாகி உள்ளது. இது வேதனை அளிக்கிறது என்று இயக்குனர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.

ரேஸில் “லப்பர் பந்து” வெற்றி

செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான படங்களில் ஹரிஸ் கல்யாணம், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்த “லப்பர் பந்து” படம் முதலிடத்தை பிடித்துள்ளது. மக்களின் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது. இப்படம் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here