ஆரம்ப கால கட்டத்தில் திரைப்படங்களில் சிறுகதாபாத்திரத்தில் நடித்து வந்தார், இவர் இப்போது பிரபல நடிகராகவும், டைரக்டராகவும் வலம் வருகின்றனர். இவர் கடந்த 2019 ம்வருடம் வெளியான LKG என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக களமிறங்கினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்னும் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த படத்தின் 2 ம் பாகம் எடுக்க போவதாகவும், அதில் திரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2022 -ம் வருடம் வெளியான குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், R.J பாலாஜி ஒரு படம் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பா ரஞ்சித்தின் உதவியாளர் சித்தார்த் விஸ்வநாத் இயக்க போகிறார்.

R.J பாலாஜி இதுவரை நடித்த படங்களிலேயே, அதிக பொருட் செலவில் உருவாகும் திரைப்படம் இந்த படம் தானாம். சுமார் ரூ.16 கோடி செலவில் இப்படம் தயாராகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here