Teenz Teaser: பார்த்திபன் ஏன் இப்படி பயமுறுத்துறாரு.. ஹாரர் ஸ்டைலில் ரிலீசான டீன்ஸ் டீசர்!

0
476
Teenz Teaser
Teenz Teaser

Teenz Teaser : இரவின் நிழல் படத்திற்கு பின் அடுத்து ஒரு எக்ஸ்பீரிமென்ட்டல் படத்தை தான் பார்த்திபன் தரப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீன்ஸ் என டைட்டில் வைத்தது மட்டுமில்லாமல் பதின்மூன்று வயது சிறுவர்களையே முன்னணிகேரக்டரில் நடிக்க வைத்துள்ளார்.

குழந்தைகளுக்கான படமாக டீன்ஸ் வரப்போகிறது என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தற்போது ரிலீசாகியிருக்கும் டீன்ஸ் டீசர் மாறுபட்ட அனுபவத்தையே கொடுக்கும்.

Teenz Teaser
Teenz Teaser

அரண்மனை 4 டிரெய்லர் வெளியான நிலையில், தமிழில் மற்றுமொரு ஹாரர் படமாக டீன்ஸ் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால், வழக்கமான ஹாரர் படம் போல இல்லாமல் பார்த்திபனுக்கே உரித்தான வகையில் டீசர் வித்தியாசமாக மிரட்டுகிறது.

சிங்கிள் ஷாட் படம்:

உலகின் பிரபல இயக்குநர்களே சிங்கிள் ஷாட்டில் படங்களை இயக்குவதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டுள்ள நிலையில், இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் அப்படிபட்ட படத்தை அதிக நடிகர்களை நடிக்க வைத்து ஒரு மனிதனின் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை என எல்லாவற்றையும் எந்தவொரு கட்டும் இல்லாமல் நான் லீனியர் பாணியில் சொல்ல முடியும் என்பதை மிகவும் அருமையாக செய்து காட்டி அசத்தினார்.

Teenz Teaser

இரவின் நிழல் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்து மிகப்பெரிய பலமாக இருந்தார். அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை: ஆனால், பார்த்திபன் நடித்து இயக்கி வெளியான இரவின் நிழல் படம் எக்ஸ்பிரீமென்ட் படமாக ரிலீசானாலும், அந்த படம் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. மேலும், இரவின் நிழல் விருதுகளையும் குவிக்க முடியாமல் தடுமாறியது. இதை விட இதற்கு முன் பார்த்திபன் எடுத்த ஒத்த செருப்பு சைஸ் 7 படம் சிறந்த தரமான படம் என விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றது.

இதையும் படிங்க : புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில்.. இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப மாறுகிறார் பார்த்திபன்

டீன்ஸ் டீசர்: Teenz Teaser

இந்நிலையில், பார்த்திபனின் அடுத்த படமான டீன்ஸ் டீசர் வெளியாகி உள்ளது. 500 ஆண்டுகால பழமையான கிணற்றில் கயிறு கட்டி இரைக்க முயன்றால் கயிறு மேலே வராமல் அப்படியே நிற்கும், அப்போ உள்ளே பேய் இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளாமல் என சரியான பில்டப்புடன் டீன்ஸ் டீசர் ரிலீசாகி இருக்கிறது. டி. இமான் இசை டிரெய்லரிலேயே ஹாரர் அனுபவத்தை சரியாக கொண்டு செல்கிறது. விஷுவலாகவும் ஒவ்வொரு ஃபிரேமும் வித்தியாசமாகவும் மிரட்டலாகவும் அமைந்துள்ளது. விரைவில், டீன்ஸ் படத்தை வெளியிடும் முயற்சியில் பார்த்திபன் ஈடுபட்டு இருக்கிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here