நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகனாக இருந்து வருகிறார். அவர் சொந்த தயாரிப்பிலும் நிறைய படங்கள் எடுத்து வருகிறார்.

தனது தம்பி எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தையும் லாரன்ஸ் தயாரித்து வருகிறார். தனது தம்பிக்கு நடிக்க வேண்டும் என்கிற ஆசை பல காலமாக இருந்ததாகவும் அதை நிறைவேற்ற உள்ளதாகவும் முன்பே அறிவித்தார் லாரன்ஸ்.
காஸ்ட்லீ கிப்ட்
தற்போது எல்வின் கதாநாயகனாக நடிக்கும் புல்லட் படம் வெளியாக தயாராக இருக்கிறது. இந்த நிலையில் படம் முழுவதையும் பார்த்த லாரன்ஸுக்கு தம்பியின் நடிப்பு மிகவும் பிடித்து இருந்ததாம்.

அதனால் உடனே ஒரு சொகுசு காரை வாங்கி எல்வினுக்கு பரிசாக கொடுத்து இருக்கிறார். அதை அவரே இன்ஸ்டாவிலும் தெறிவித்து இருக்கிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here