உங்கள் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய மெகாத்தொடர் மல்லி, ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் உள்ள பாசப்போராட்டத்தில் கதாநாயகி எப்படி வந்து இணைகிறாள் என்பதே கதை. மல்லி பெருமாள்புரம் கிராமத்தில் பால்வாடி டீச்சராக பணிபுரிகிறாள்.

அந்தப்பள்ளியில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டு அதன் மூலம் பிரச்சனைகளில் சிக்கி சென்னைக்கு வரும் சூழலுக்கு தள்ளப்படுகிறாள். சென்னையில் தாயில்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் குழந்தை வெண்பா. அவள் தந்தையிடம் தனக்கு அம்மா வேண்டும் எனக் கேட்டுப் போராடுகிறாள்.
இரண்டாவது திருமணத்தில் உடன்பாடு இல்லாத விஜய் குழந்தையை சமாளிக்க என்ன செய்கிறான். அந்தக் குழந்தைக்குத் தாயாக மல்லி எப்படி வந்து சேருகிறாள் என்பதை விறுவிறுப்பான சம்பவங்கள் திருப்பங்களோடு சுவாரஸ்யமாக சொல்கிறது மல்லி.
மிகுந்த பொருட்செலவில் இத்தொடரை சரிகமா நிறுவனம் சார்பில் திருமதி.B.R.விஜயலட்சுமி தயாரிக்கிறார். விஜய், நிகிதா,பேபி ராஹிலா, மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்கியராஜ், மதன்பாப், தேவ்ஆனந்த், சாய்ராம், வெங்கட், கிருத்திகா, நளினி, பாரதிமோகன், ஐசக், மற்றும் பல முன்னனி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். திரைக்கதை : மாரிமுத்து
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here