பயில்வான் ரங்கநாதன் நடிகராகவும், பத்திரிகையாளராகவும் விளங்குபவர். அவர் நடிகர்கள், நடிகைகள் பற்றி அந்தரங்கமான விஷயங்களை பேசி; அதனால் சர்ச்சைகளை உருவாக்கி அதனை கொண்டு யூட்யூபில் பிரபலமாக இருப்பவர். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. சூழல் இப்படி இருக்க வரலட்சுமி – நிக்கோலாய் கல்யாணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சர்ச்சைகளை உண்டாக்கி வருபவர். சினிமாவில் நடித்து, பத்திரிகையாளராகவும் இருந்து வருபவர் இப்போது யூட்யூப் இடங்களில் இயங்கி வருகிறார். தான் பேசும் சேனல்கள் அதிக பார்வையாளர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள், நடிகைகள் பற்றிய அந்தரங்க விஷயங்களை தொடர்ந்து பேசிக்கொண்டிருகிறார். அவர் பேசுவது அனைத்தும் பச்சை பொய் என்று ஒருதரப்பினர் சொன்னாலும்; கடந்த பல ஆண்டுகளாகவே சினிமாவுடன் தொடர்பில் இருந்து கொண்டுள்ளதால் தான் பேசுவது உண்மை என்று பயில்வான் கூறுவது வழக்கம்.
பதிலடி: ஆரம்பத்தில் அவருடைய பேச்சு செலிபிரிட்டிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் காலம் போகப்போக அவரது பேச்சில் அநாகரீகம் ஒட்டிக்கொண்டது. நிலைமை இப்படி இருக்க நடிகை ரேகா நாயர் இரவின் நிழல் திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்ததை வைத்து பயில்வான் மோசமாக பேச; ரேகாவோ நேரடியாக பயில்வானிடம் மல்லுக்கு சென்றுவிட்டார். அது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி; ரேகா நாயருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர். அதேபோல் ராஜன், விஷால், பாலா போன்றவர்களும் தங்களது தரமான பதிலடியை கொடுத்திருக்கின்றனர்.
வழக்கு போடுங்கள்: தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரம், இயக்குநர் பாலாவுக்கும் அவரது மனைவிக்கும் நடந்த விவாகரத்து, நடிகை அஞ்சலி தொடர்பான விவகாரம் என பயில்வான் ரங்கநாதன் பேசாத விஷயங்களே இல்லை. ஆனால் இவை அத்தனையையும் இவர் அருகில் இருந்து பார்த்தது போல பேசுவார். இதனால் பல பத்திரிகையாளர் சந்திப்புகளில் சலசலப்பும் உண்டாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு கூட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பயில்வானுக்கும், ஷகீலாவுக்கும் வாக்குவாதம் நடந்தது நினைவு கூரத்தக்கது

வரலட்சுமி – நிக்கோலாய் திருமணம்: இந்நிலையில் வரலட்சுமியும், நிக்கோலாயும் செய்துகொண்ட கல்யாணம் குறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அந்த வீடியோவில் பேசிய அவர், “வரலட்சுமி – நிக்கோலாய் கல்யாணம் தாய்லாந்தில் நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால் அங்கு நடக்கவில்லை. ஏனெனில் அங்கே திருமணம் நடந்தால் இங்கே செல்லாது என்பதால் அந்த முடிவினை மாற்றி கொண்டார்கள். சென்னை தாஜ் ஹோட்டலில் அவர்களது திருமணம் நடந்தது.
தாய் வரவில்லை: வரவேற்பு நிகழ்ச்சி லீலா பேலஸில் நடந்தது. திருமண அழைப்பிதழ் கொடுத்த போதே சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவி அதில் பெரிதாக கலந்துகொள்ளவில்லை. சாயாதேவி திருமணத்துக்கும் வரவில்லை என்று சொல்கிறார்கள். அதனால் வரலட்சுமியும் சோகமாகிவிட்டார். மேலும் நிக்கோலாய் நினைத்திருந்தால் திருமணத்தை மும்பை தாஜ் ஹோட்டலிலேயே வைத்திருக்கலாம். ஆனால் சென்னை தாஜ் ஹோட்டலில் திருமணத்தை வைத்திருக்கிறார்கள். அது ஏன் என தெரியவில்லை” என்றார்.
இது உண்மையா?: பயில்வான் ரங்கநாதனின் இந்தப் பேச்சு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. அதாவது வரலட்சுமி திருமணம் தாய்லாந்தில் நாட்டில் தான் நடைபெறும் என்று உறுதியாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது பயில்வானோ சென்னையில்தான் நடந்தது என்று சொல்கிறார். முக்கியமாக சரத்குமாரின் முதல் மனைவி திருமணத்தில் பங்கேற்கவில்லை என்றும் சொல்கிறார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள், சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டும் வகையில் வரலட்சுமி ஒரு விளக்கம் கொடுத்தால் என்ன? என்று சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here