பயத்தில் நடிகை! சென்னையில் இளம் நடிகை மமிதா பைஜூவிடம் எல்லை மீறிய ரசிகர்கள்.. வீடியோ இதோ

0
75

மமிதா பைஜூ

சமீபத்தில் வெளியாகி மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் ப்ரேமலு. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு தென்னிந்திய அளவில் நல்ல முன்னேற்றம் கிடைத்தது.

ப்ரேமலு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் தான் நடிகை மமிதா பைஜூ. மலையாளத்தில் கனவு கன்னியாக வந்துகொண்டிருந்த இவர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபல் படத்தின் வாயிலாக தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து விஷ்ணு விஷால், பிரதீப் ரங்கநாதன் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து தற்போது நடித்து வருகிறார். சென்சேஷனல் ஹீரோயினியாக வலம் வரும் மமிதா பைஜூ நேற்று சென்னை வந்துள்ளார்.

எல்லை மீறிய ரசிகர்கள்

பிரபல Mall ஒன்றில் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை மமிதா பைஜூவை பார்க்க அங்கு ஏராளமான ரசிகர்கள் வந்துள்ளனர். இதனால் அங்கு நெரிசல் உண்டாகி நடிகை மமிதா பைஜூ அந்த கூட்டத்தில் சிக்கியுள்ளார்.

ரசிகர்களின் இந்த எல்லைமீறிய செயலால் மமிதா பைஜூ கொஞ்சம் பயந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ ..

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here