படம் எடுக்கப்பட்டு நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் Unreleased Movies பற்றி விரிவாக பார்ப்போம் :
1. #RendavathuPadam
“தமிழ் படம்” வெற்றியை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கிய படம் “ரெண்டாவது படம்” .. விமல்,ரம்யா நம்பீசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் ரிச்சர்ட் ரிஷி நடித்தனர்.. ட்ரெய்லர் கூட வெளியானது ஆனால் படம் இன்று வரை வெளியாகவில்லை…


2. #Sippai
சிலம்பாட்டம் படத்தை இயக்கிய Cinematographer சரவணன் இயக்கத்தில் 2013 இல் இந்த படம் உருவானது.. கும்கி வெற்றியின் உச்சத்தில் இருந்த லஷ்மி மேனன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்தனர்.. இசை யுவன்… இதன் ட்ரெய்லரும் யூடியூப் இல் உள்ளது .. படம் வரவில்லை இன்றும்.


3. #Kashmir
கௌரி மனோகர் இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் 2003 இல் உருவான படம் “காஷ்மீர்” … தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் வெளியானது… ஆனால் படம் இன்று வரை வெளியாகவில்லை…

4. #AnnaNeeEnDeivam
எம்.ஜீஆர் – லதா – நம்பியார் நடிப்பில் 1979 இல் உருவான படம் “அண்ணா நீ என் தெய்வம்” .. எம்.ஜீ.ஆர் இன் கடைசி படமாக உருவானதால் அவரின் வெறியன் கே.பாக்யராஜ் இந்த படத்திற்கு ஏற்ப திரைக்கதை அமைத்து இதன் தொடர்ச்சியாக எடுத்த படம் “அவசர போலீஸ் 100”..

5. #Engineers
காந்தகிருஷ்ணா இயக்கத்தில் அரவிந்த் சுவாமி , மாதுரி தீட்சித் நடிப்பில் 1999 இல் உருவானது “இன்ஜினியர்”.. அப்போது பிரபலமாக இருந்த சர்தார் சரோவர் அணை உண்மை சம்பவங்களை தழுவி உருவானது… ரஹ்மான் இசை … பெரிய எதிர்பார்ப்போடு எதிர்ப்போடு கிடப்பில் போடப்பட்டது.
6. #KadhalToKalyanam
அவள் பட இயக்குநர் மிலிந்த ராவ் இயக்கிய முதல் படம் இது .. ஆர்யா தம்பி சத்யா மற்றும் குத்து ரம்யா (திவ்யா ஸ்பந்தனா) இணைந்து நடித்தனர்.. ட்ரெய்லரும் வெளியானது… Preview Show வில் கூட நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது.. ஆனால் ரிலீஸ் ஆகவில்லை…இசை யுவன்.

7. #KaadhalSamrajyam
2001 இல் அகத்தியன் இயக்கத்தில் அரவிந்த் ஆகாஷ்,எஸ்.பி.சரண் , வெங்கட் பிரபு நடிப்பில் உருவானது “காதல் சாம்ராஜ்யம்” … பாடல்கள் அந்த காலத்தில் ஹிட்.. ஆனால் படம் வரவில்லை

8. #NaanAvalAdhu
2006 ஆம் ஆண்டு கோணா வெங்கட் இயக்கத்தில் மாதவன்,சதா நடிப்பில் உருவானது இந்த படம்.. ஜீ.வி.இசையில் பாடல்கள் ஹிட்.. ட்ரெய்லரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது… பண பிரச்சினையால் வெளியாகவில்லை…
9. #ParisParis
2014 இல் ஹிந்தியில் ஹிட் அடித்த குயின் படத்தை 2017 ஆம் ஆண்டு தென்னிந்திய மொழிகளில் தமிழ் (காஜல்), தெலுங்கு (தமன்னா), மலையாளம் (மஞ்சிமா), கன்னடா (பருல் யாதவ்) ரீமேக் செய்யப்பட்டது… ஆனால் எந்த வெர்சனும் வெளியாகவில்லை.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


