மனசிலாயோ பாடல் சாதனை : மஞ்சு வாரியர் செய்த மேஜிக்

0
123

ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து “மனசிலாயோ” பாடல் மாபெரும் சாதனை படைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் வேட்டையன். இப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளுக்கு வரவுள்ளது. இப்படத்தை “ஜெய் பீம்” படத்தை இயக்கிய ஞானவேல் அவர்கள் இயக்கி உள்ளார் அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் பாடியது போல உருவாக்கப்பட்ட பாடல் “மனசிலாயோ”. இந்த பாடல் தற்போது வரை யூடியூப்பில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை பிடித்துள்ளது.

மஞ்சு வாரியர் செய்த மேஜிக் 

மனசிலாயோ பாடல் இந்தளவுக்கு சாதனைப் படைத்துள்ளதற்கு நடிகை மஞ்சு வாரியர் அவர்களின் கலக்கல் நடனம் தான் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். சிகப்பு சேலையில், கூலிங் கிளாஸ் அணிந்தபடி மஞ்சு ஆடிய சஆட்டத்தை ரசிகர் கொண்டாடி வருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் இனி மஞ்சு வாரியர் தான் என்று ரசிகர்கள் செல்லும் அளவுக்கு அவர் நடனத்தில் அசத்தியுள்ளார்.

மனசிலாயோ -மஞ்சு வாரியர்

“காவா-லா” பாட்டுக்கு தமன்னா. “மனசிலாயோ”   பாட்டுக்கு “மஞ்சு வாரியர்” என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

நடிகை மஞ்சு  வாரியர் அவர்களின் கலக்கல் நடனத்திற்காகவே இந்தப் பாடல் மேலும் பல கோடி பார்வையாளர்களை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here