ஒரு காட்சியில் கூட காணோம்.. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலின் ஸீன்கள் நீக்கப்பட்டதா?

0
111

தமிழில் பரத் நடித்த பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர்காஜல் அகர்வால். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. இதனால் தமிழ் பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே தெலுங்கு சினிமாவுக்கு நகர்ந்தார் காஜல்.

மகதீரா படத்திற்கு பிறகு காஜல் அகர்வாலின் மதிப்பானது மாறியது, அடுத்தடுத்த படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகையாக மாறினார்.

காஜல் அகர்வாலுக்கு டாப் நடிகையாக மாறவே தமிழில் நடிகர் விஜயுடன் துப்பாக்கி திரைப்படத்தில் நடித்தார். அந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது, இதை தொடர்ந்து விஜய்யுடன் ஜில்லா படத்திலும் ஜோடி போட்டு நடித்தார் காஜல்.

தமிழ் சினிமாவிலும் காஜலுக்கான மவுசு கூடவே டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து டாப் நடிகையானார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் காஜல்.

2020 ஆம் வருடம் கொரோனா காலகட்டத்தில் மும்பை தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் காஜல், தற்போது இந்த தம்பதிக்கு நீல் என்ற மகன் இருக்கிறார் .

திரையரங்குகளில் இந்தியன் 2 படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியானது, படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி ஆகிவிட்டார்கள்.

அதற்கு முக்கிய காரணம், இந்தியன் 2 படத்தின் ஒரு சீன்களில் கூட நடிகை காஜல் அகர்வாலை காணவில்லை என்பது தான். இந்தியன் 2 படத்தில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் காஜல் அகர்வால் நடித்திருப்பதாக பேசப்பட்டது. ஆனால் படத்தின் டிரைலர், டீசர், வெளியான பாடல்கள் என இவற்றில் எதிலுமே காஜல் அகர்வால் இடம்பெறவில்லை.

இந்தியன் 2 படத்தின் ப்ரோமஷன்கள் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி என எல்லா நிகழ்ச்சிகளிலும் காஜல் அகர்வால் கலந்துகொண்டார். இருந்தபோதிலும் முழு படத்திலும் அவர் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பல கேள்விகளையும் கிளப்பி கொண்டிருக்கிறது.

ஒரு வேலை, தெலுங்கு ஆச்சார்யா திரைப்படத்தில் காஜல் அகர்வால் காட்சிகள் திரைப்படத்திற்கு ஸ்கோப் அளிக்கவில்லை என்று எல்லா காட்சிகளை நீக்கியது போல, இந்தியன் 2 படத்திலும் நீக்கி இருப்பார்களோ என்று ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

ஷங்கர் காஜல் அகர்வால் ஸீன்களை படத்தில் இருந்து எடுத்துவிட்டாரா என்ற ரசிகர்களின் கேள்விக்குபதில் இல்லை என்பது தான். காஜல் அகர்வால் கதாபாத்திரம் இந்தியன் 3 படத்தில் தான் இருக்கும் என்றும் அதே போல் இந்தியன் 3 படத்தில் காஜல் அகர்வாலின் கேரக்டர் மிகவும் முக்கியமான ஒன்று என்று ஷங்கரே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 படம் வெளியாகி மக்களிடையே எதிர்பார்த்த அளவு வெற்றியை காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பலரும் இந்தியன் 2 படம் முதல் பாகம் போல இல்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here