தமிழ் சினிமாவில் தற்போது ஒரு மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரிடம் பல விஷயங்கள் இப்போது மாறினாலும் மாறாத ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் எதையும் ஓப்பனாக பேசுவது. அதனால் தனக்கு பிரச்சினையே வந்தாலும் மனம் திறந்து அனைத்தையும் ஓப்பனாக பேசுபவர் சிம்பு.

இவருக்கு என அதிகமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். துவக்கத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமாகி இன்று ஒரு பெரிய நடிகர் என்ற அந்தஸ்துடன் இருந்து கொண்டிருக்கின்றார் சிம்பு. இவருக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. அவரது படங்கள் மாநாடு படத்திற்கு முன்பு வரை சரியாக போகவில்லை என்றாலும் அவருக்காக அவருடைய ரசிகர்கள் உற்ற துணையாக இருந்தார்கள்.
அதுவே சிம்புவின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது. தன் தந்தையின் அறிமுகத்தில் வந்திருந்தாலும் இன்று தன் அப்பாவையே மிஞ்சிய ஒரு செல்வாக்கு கொண்ட நடிகராக சிம்பு வலம் வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்த காதல் அழிவதில்லை படத்தில் நடந்த ஒரு சுவாரசிய நிகழ்ச்சியை அவருடன் நடித்த நடிகர் காதல் சுகுமார் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
காதல் அழிவதில்லை படம் தான் சிம்பு முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம். அந்த படத்தின் படப்பிடிப்பு வைஷாக் நகரில் எடுக்கப்பட்டு கொண்டிருந்ததாம். அப்போது அங்கு ஒரு கிட்டார் இருப்பதைப் பார்த்த சுகுமார் அதை எடுத்து வாசிக்க தொடங்கி உள்ளார். அடிப்படையில் அவருக்கு கிட்டாரை குறித்த எதுவுமே தெரியாது.

அதை பார்த்ததும் சிம்பு ‘ஒரு விஷயம் பற்றி தெரிந்தால் மட்டுமே அதை செய்ய வேண்டும். தெரியலைனா சும்மா இருக்கணும்’ என பல பேர் முன்னாடி கிண்டல் அடித்தாராம். இது சுகுமாருக்கு அவமானமாக தோன்றியிருக்கிறது. உடனே காதல் சுகுமார் ‘சிம்பு முன்னாடி இந்த கிட்டாரை எப்படியாவது வாசித்து காட்ட வேண்டும்’ என சபதம் எடுத்து கொண்டு சில மாதங்கள் கிட்டார் வகுப்புக்கு சென்று நன்கு கற்றுக்கொண்டு மீண்டும் சிம்புவிடம் வந்து நின்றாராம். ‘சிம்பு இதை மட்டும் கேளுங்கள்’ எனசொல்லி காதல் அழிவதில்லை படத்தில் வரும் மாறா மாறா சுகுமாரா என்ற பாடலை கிட்டார் மூலம் வாசித்துக் காட்டி உள்ளார். அதை பார்த்ததும் மிகவும் ஆச்சரியப்பட்டு நின்னாராம் சிம்பு.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here