ரேஷ்மா பசுபுலேட்டி
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி, வம்சம் மற்றும் மரகதவீணை ஆகிய தொடர்களில் முக்கிய பத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி.
இந்த தொடர்களை கடந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் பிரபலம் அடைந்தார்.
படங்களில் நடித்து கொண்டிருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சீரியல்கள், படங்களை கடந்து இன்ஸ்டாவில் படு ஆக்டீவாக உள்ள இவர் அண்மையில் ஒரு பேட்டியில் எமோஷ்னலான விஷயத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கணவருடன் இருந்தபோது நான் நான்கு மாதம் கர்ப்பமாக இருந்ததேன், அவர் அதை மறந்து போய் என்னை அடித்துவிட்டார். அதன் காரணமாக குழந்தை வெளியில் வந்துவிட்டது, அந்த பயத்தில் அவர் என்னை விட்டு ஓடிவிட்டார்.
தனியாக நானே என்ன செய்வது என தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று சேர்ந்தேன். ராகுல் நான்கரை மாத குழந்தையாக பிறந்தான், அந்த நாள் முதல் ஒன்பது மாதம் வரை அவன் இன்குபெட்டரில் இருந்தான்.
அங்கு எனது நிலைமையை சமாளிக்க முடியாமல் போனதால் இங்கு வந்தேன். ராகுல் பிறப்பதற்கு முன்பே எனக்கு ஒரு குழந்தை பிறந்து மரணமடைந்துவிட்டது. என்னைவிட்டு ராகுலும் போய்விடுவானோ என்ற பயம் எனக்குள் இருந்தது, அவனை காப்பாற்ற மிகவும் போராடினேன்.
என் முதல் குழந்தையை அனைவரும் மறந்துவிட்டார்கள், ஆனால் என்னால் அந்த நாளை இன்று வரை மறக்கவே முடியவில்லை என எமோஷ்னலாக கூறியுள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here