பிரியாணி அரிசிக்கான விளம்பரத்தில் நடித்த நடிகர் துல்கர் சல்மானுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

தென்னிந்திய திரை உலகில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவரானவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் மம்முட்டியின் மகனான இவர் மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தமிழில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான ‘ லக்கி பாஸ்கர்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதன் வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் பவன் சாதிநேனி இயக்கத்தில் ‘ஆகாசமோல் ஓகா தாரா’ என பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் தற்போது நடித்துவரும் துல்கர் சல்மான். திரைப்படங்கள் மட்டும் இன்றி விளம்பர படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஒரு பிரியாணி அரிசியின் விளம்பரத்திற்கு நடித்திருந்த துல்கர் சல்மான் மீது ‘பத்தனம்திட்டா’ என்னும் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கேட்டரிங் நிறுவனம் சார்பில் நுகர்வோர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு சிக்கலை ஏற்படுத்துள்ளது.
அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்காக பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனத்தின் பிரியாணி அரிசி வழங்கப்பட்டுள்ளது. அந்த அரிசியில் சமைக்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட பலரும் தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கும் மற்றும் அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த நடிகர் துல்கர் சல்மான் மீதும் வழக்கு தொடரப்பட்டு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


