விஜயகாந்த் உருவத்தை பயன்படுத்தாதீங்க.. கோட் திரைப்படத்திற்கு சிக்கலை உண்டாக்கிய பிரேமலதா..!

0
99

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் விஜய். இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு G.O.A.T (The Greatest Of All Time) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் மற்றும் சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, யோகிபாபு, ஜெயராம், கணேஷ், அஜ்மல் அமீர்,பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், வைபவ், அஜய் ராஜ், சினேகா, மீனாட்சி சவுத்ரிமற்றும் லைலா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாகவும் டைம் டிராவலை மையமாக கொண்டு எடுப்பதாகவும் கூறப்படுகிறது. GOAT ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இப்பட வேலைகள் முடிந்த பிறகு தனது 69 ஆவது படத்தில் நடிக்க இருக்கும் தளபதி விஜய் அந்த படத்தோடு தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு முழு நேர அரசியல் களம் இறங்க உள்ளது எல்லோரும் அறிந்த விஷயமே. இந்நிலையில், விஜயின் 68 மற்றும் 69 ஆவது ஆக 2 திரைப்படங்களும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்பட வேலைகள் ஏறத்தாழ 60% முடிவுற்ற நிலையில், தற்போது, கோட் படக்குழு அமெரிக்காவில் ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.

விரைவில், இப்படத்தின் பணிகள் முடிவடைந்து தளபதி விஜயின் கோட் திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, லியோ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு நிகழ்ச்சி முதலில் மலேசியாவில் நடத்தப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதன் பிறகு சென்னையில் நடத்த திட்டமிட்டு இறுதி நேரத்தில் அதற்க்கான உரிய அனுமதி கிடைக்காத நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இருப்பினும் திரைப்பட இசை வெளியீட்டு விழா முன்கூட்டியே மிகுந்த திட்டமிடலோடு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா அல்லது சிங்கப்பூர் ஆகிய 2 நாடுகளில் எதாவது ஒரு இடத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் விஜய் அடுத்ததாக சொல்ல போகிற குட்டி ஸ்டோரியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு சில நிபந்தனைகளை போட்டுள்ளதாம். அதாவது, ஆரம்பத்தில் தி கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 55 கோடிக்கு கேட்டு பல கெடுபிடிகளை இப்படத்திற்கு விதித்ததாம். அதாவது, படம் வெளியாகி ஒரு மாதத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவோம் என்றும், நாங்கள் சொல்லும் தேதியில் தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும், படத்தில் அரசியல் தொடர்பான சர்ச்சைகள் இருக்கக் கூடாது என்றும், அடுக்கடுக்கான நிபந்தனைகளை போட்டிருக்கிறது.

இதற்கு, தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் சரியென சொல்லிவிட்டதாம். ஆனால், இதன்பின் மற்றொரு இறுதி நிபந்தனை ஆக சன் டிவிக்காக நடிகர் விஜய் 2 மணி நேரம் ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டதற்கு நடிகர் விஜய் சிறிதும் யோசிக்காமல் நோ சொல்லிவிட்டாராம். இதனால், கோட் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கடுப்பான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரத்து செய்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து தற்போது ஜி நிறுவனத்திற்கு கோட் படத்தின் சேட்டிலைட் உரிமம் கை மாறி உள்ளதாம். இப்போதே இப்படி ஒரு சிக்கலை சந்தித்துள்ள விஜய் படத்தின் வெளியீட்டின் போது என்னென்ன சிக்கல்களை சந்திக்க போகிறதோ என்று ரசிகர்கள் கதி கலங்கி உள்ளனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here