Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

தோற்று, தோற்று மீண்டும் எழுந்த சாய்பல்லவி : தமிழக ரசிகர்கள் கொண்டாடும் தமிழ் நடிகை

நம்ம தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட கதாநாயகிகள் வெற்றி நட்சத்திரம் ஆக வளம் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திர பிரதேசம் என வெளி மாநிலங்கள்…

நம்ம தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட கதாநாயகிகள் வெற்றி நட்சத்திரம் ஆக வளம் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திர பிரதேசம் என வெளி மாநிலங்கள் தான். தமிழ் நடிகை என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை.

மற்ற நடிகைகள் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவுக்கும் – தமிழ் ரசிகர்களுக்கும் கிடைத்த பொக்கிஷம் தான் சாய்பல்லவி.

நடனத்திலும், நடிப்பிலும், தோற்றத்திலும் என அனைத்திலும் சிறப்பாக செய்யக்கூடியவர் சாய்பல்லவி. சாய்பல்லவிக்கு என கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்களிலும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

கஸ்தூரி மான் படத்திலும், தாம்- தூம் படத்திலும் சிறு வேடத்தில் நடித்து, சிறிது நேரம் மற்றும் முகத்தை காட்டிவிட்டு சென்றவர் சாய் பல்லவி.

Advertisements

பிரேமம் என்னும் மலையாள படத்தின் மூலம் கேரளம் மற்றும் தமிழ்நாடு என இரு மாநிலங்களில் புகழின் உச்சிக்கே சென்றார். இருப்பினும் தமிழ் சினிமாவில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு தான்.

என்ன இருந்தாலும் சாய்பல்லவி தமிழ் நடிகை என்று தமிழ் ரசிகர்கள் அவருக்கு தனி இடமே கொடுத்துள்ளனர். அவர் நடிப்பில் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் “அமரன்” படத்தில் சாய் பல்லவி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படத்தில் முக்கியமான முதல் நபர் சாய்பல்லவியாக உள்ளார்.

சாய் பல்லவி வயதானாலும் முகத்தில் வயது தெரியாது என்றும் இளமையாகவே சாய் பல்லவி இருப்பார் என்றும் நிறைய பட கொடுத்து கொடுத்து அசத்துவார்  என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here