Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

நாங்க நினைச்சா முடிப்போம்! ஆனா முடிக்க மாட்டோம்! – இப்படிக்கு ‘பாக்கியலட்சுமி’ சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் “பாக்கியலட்சுமி” சீரியல், கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை சீரியல் 5 ஆண்டுகளுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது. நடுத்தர குடும்பப்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் “பாக்கியலட்சுமி” சீரியல், கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை சீரியல் 5 ஆண்டுகளுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது. நடுத்தர குடும்பப் பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதையை நகர்த்தி செய்கிறார்கள். ஆரம்பத்தில் பெரிதாக பேசப்பட்ட இந்த சீரியல் தற்போது எப்போ முடிப்பீங்க..? என்றுதான் ரசிகர்கள் கோபத்துடன் கேட்கிறார்கள்.

அந்த அளவுக்கு சீரியலை முடிப்பது போல் கொண்டு போய் மீண்டும் புதுப்புது கேரக்டர்கள் புதுப்புது பிரச்னைகளை கொண்டு வந்து சீரியலை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
இந்த சீரியலில், ராதிகா என்றும் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி பிறகு பழனிசாமி கதாபாத்திரம் பாக்கியலட்சுமி அவர்களுக்கு ஜோடியாக கொண்டு வந்து அதன்பிறகு ட்ராக் மாற்றி கோபி – பாக்கியா சேர்வது போல் தற்போது போய்க்கொண்டிருக்கிறது.

நேற்றைய எபிசோடு :-

Advertisements

இனியாவின் கணவரான நிதிஷ் போதை வஸ்துகளை பயன்படுத்தி தள்ளடியபடியே, வீட்டிற்கு வந்து படுக்கிறார். இனியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இனியா தனது கணவருக்கு போதை வஸ்துகளை பயன்படுத்துவது குறித்து அவளுக்கு தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க மற்றோரு பக்கம் பார்த்து
பாக்கியலட்சுமி தான் ஆரம்பித்துள்ள சிறிய ஹோட்டலில் என்ன நடக்கிறது என்பது காட்டப்படுகிறது.

இந்த சீரியல் முடியும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.
இரண்டு புதிய அத்தியாயங்களை இந்த சீரியலின் இயக்குனர் கொடுத்திருக்கிறார் ஒன்று இனியாவின் கல்யாண வாழ்க்கை; மற்றொன்று மீண்டும் பாக்கியலட்சுமி மீண்டும் முன்னேற்றம் அடைவார்களா? இதற்கு இடையில் பாக்கியலட்சுமி- கோபி காதல் ட்ராக். என்ன இருந்தாலும் ரசிகர்கள் சொல்வது என்னவென்றால் சீக்கிரம் சீரியலை .முடீங்கப்பா என்பது தான்…!

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here