10 ஆண்டுகளுக்கு பிறகு : நடிகர் சிம்பு உடன் மீண்டும் நடிக்க வருகிறார் நடிகர் சந்தானம்

0
94

சிம்புவின் 49 ஆவது படத்தில் நடிகர் சந்தானம் நடிக்க உள்ளதாக இன்ப அதிர்ச்சி தகவல் வெளியாக்கி உள்ளது.

சிம்பு நடிக்கும் 49ஆவது படம் குறித்த அறிவிப்பு, அவரது பிறந்தநாளின் போது வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும், இந்த படத்தில் சந்தானம் இணைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவின் பிறந்தநாளன்று, அவரது 49வது, 50வது மற்றும் 51வது படங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

குறிப்பாக, சிம்பு 49 படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே ’பார்க்கிங்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய நிலையில், இவரது இரண்டாவது படமே சிம்புவின் படமாக அமைந்ததற்கு வாழ்த்துகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு நடிகர் சிம்புக்கு ஜோடியாக, நடிகை சாய்பல்லவி அவர்கள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இறுதியாக நடிகர் சிம்பு மற்றும் நடிகர் சந்தானம் இணைந்து நடித்த படம் “இது நம்ம ஆளு”, மற்றும் “வாலு”  படங்கள் தான். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து நடிக்க  உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

அதே சமயத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக கதையின் நாயகனாக மட்டுமே நடித்து வரும் நடிகர் சந்தானம் அவர்கள் சிம்பு அவர்களின் 49வது படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார்? என்பதும் தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here