நடிகர் சிலம்பரசன் அவர்கள் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு தனது ரசிகர்களை வெறியேற்றிக் கொண்டிருக்கிறார். இதனை சமூக வலைத்தளங்களில் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சிம்புவின் அடுத்த படம் அப்டேட் குறித்து அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.
அதனை நடிகர் சிலம்பரசன் அவர்களே, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிலம்பரசன் அவர்கள் அடுத்த படத்தை அவரே இயக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இன்று மாலை அறிவிப்பு:
“டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூட்ல நாளைக்கு ஷார்ப்பா, மாலை 6.06 மணிக்கு வரேன்” என்று அவர் இந்த பதிவில் கூறியுள்ளார். இது அவரது புதியப்படத்திற்கான அறிவிப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் இதற்கான முன்னோட்டத்தையும் அவர் தெரிவித்துள்ள நிலையில், இந்தப் புதிய படம் குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
“தலைவன் ஆன் தி வே”, “மீண்டும் வரார் தலைவர்”, “ வா தலைவா…வா தலைவா..” என்றெல்லாம் இந்த பதிவின்கீழ் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர் அவரின் தீவிர ரசிகர்கள்.
ஏற்கனவே துப்பாக விஜய் அரசியலுக்கு சென்று விட்டால் நடிகராக சென்று விட்டார் சிவகார்த்திகேயன் தான் அடுத்த முன்னணி நடிகன் என்று பேசப்பட்ட நிலையில் களம் இறங்குகிறார் நடிகர் சிலம்பரசன் என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here