சூர்யாவை முந்தி சென்று விஜய் இடத்தை பிடிக்கும் சிவகார்த்திகேயன்.. கைவசம் உள்ள தரமான 6 படங்கள்

0
182

Sivakarthikeyan: சிறு வயதில் முயல், ஆமை கதை கேட்டிருப்போம். அப்படி ஒரு கதை தான் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. பொதுவாக சிவகார்த்திகேயன் படங்களை தேர்வு செய்வது குடும்பம் மற்றும் குழந்தைகளை கவர்வதாக தான் இருக்கும். மாஸ், கிளாஸ் இது போல எல்லாம் முயற்சி செய்து பார்க்க மாட்டார்.

இருந்தாலும் குடும்பங்கள் கொண்டாடக்கூடிய ஹீரோவாக இருப்பதால் சிவகார்த்திகேயனுக்கு எப்போதுமே மிகுந்த வரவேற்பு உண்டு. சூர்யா மாஸ் ஹீரோ பட்டியலில் இருப்பவர். ஆனால் கடந்த சமீப காலமாக சூர்யாவுக்கு சொல்லும் அளவிற்கு பெரிய படங்கள் எதுவும் இல்லை.

கங்குவா வழக்கமான பிரம்மாண்ட படங்களின் பட்டியலில் சேர்ந்து விடும். மீண்டும் தன்னை தனது படைப்புகளால் கதாநாயகனாக சூர்யா நிருபிப்பதற்கு சுதா கொங்கராவின் படம் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சூர்யா தனது நிலைமை புரிந்து கொள்ளாமல் அந்த வாய்ப்பை போனால் போகட்டும் என்பது போல தவற விட்டு விட்டார். இதனால் தமிழ் சினிமாவில் விஜய்க்கு அடுத்து இருக்கும் நீண்ட இடைவெளியை நிரப்புவதற்கான படங்களின் பட்டியல்களோடு சிவகார்த்திகேயன் காத்திருக்கிறார். அவர் கைவசம் இருக்கும் 6 படங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

அமரன்: மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி இருக்கிறது அமரன் படம். இதனால் இந்த படத்தின் வெற்றி வெளியாவதற்கு முன்பே உறுதியாகிவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமரன் தீபாவளி கொண்டாடத்திற்காக அக்டோபர் 31ஆம் தேதி அன்று வெளியாகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

SK23: ரஜினியை வைத்து தர்பார் திரைப்படம் இயக்கிய பிறகு முருகதாஸ் இணைந்திருக்கும் தமிழ் கதாநாயகன் சிவகார்த்திகேயன் தான். இந்த படம் விஜய்க்கு சொல்லிய கதை. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 40 கோடி. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவிஸ் தமிழ் சினிமாவில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். இந்த படத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால்.

SK 24: சிவகார்த்திகேயன் டான் படத்திற்கு பிறகு மறுபடியும் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் தன்னுடைய 24 ஆவது திரைப்படத்தில் இணைகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு முக்கிய ரோல் அளிக்கப்பட்டிருக்கிறது. 2025 ஆம் வருடம் வெளியிடலாம் என பிளான் பண்ணப்பட்டிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைத்து ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

SK 25: சிவகார்த்திகேயன் தன்னுடைய 25 ஆவது படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். இந்த படம் அரசியல் கதையை மையபடுத்தி எடுக்கப்படும் படம் என சொல்லப்படுகிறது. GOAT படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

SK 26: இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட தரமான படங்களை கொடுத்த டைரக்டர் சுதா கொங்கரா உடன் தன்னுடைய 26 ஆவது படத்தில் சிவா இணைய போகிறார். சூர்யா நடிப்பில் உருவாக வேண்டிய புறநானூறு படத்தின் கதையில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். அமரன் படத்தை தொடர்ந்து SK க்கு இந்த படமும் சிறப்பான படமாக அமையும்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here