பிரபாஸ் படத்தில் பிரபல தென்கொரிய நடிகர் வில்லனாக நடிக்கிறார்?

0
63

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் பிரபல தென்கொரிய நடிகர் மா டாங் சியோக் (Ma Dong-Seok) நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாகனாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. திரையரங்குகளில் இந்தப் படம் பான் இந்தியா திரைப்படமாக ஜூன் 27-ம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகம் முழுவதும் 900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த படத்துக்குப் பிறகு ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். பெரும்பொருட்செலவில் இப்படத்தை டி சிரீஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் கூட்டாக தயாரிக்கின்றன.

இப்படத்தில் பிரபல தென்கொரிய நடிகர் மா டாங் சியோக் (Ma Dong-Seok)பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மா டாங் சியோக் தென்கொரியாவில் மட்டுமின்றி இந்தியாவிலும் அதிகமான ரசிகர்களைக் கொண்டவர். கொரிய ஆக்‌ஷன் படங்களை தொடர்ந்து காண்பவர்களுக்கு மா டாங் சியோக் மிகவும் பரிச்சயம்.

அந்த வகையில் ‘ஸ்பிரிட்’ படத்தில் மா டாங் சியோக் வில்லனாக நடிக்க இருக்கும் தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. எனினும் படக்குழு தரப்பில் இது பற்றிய அதிகாரபூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here