ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்பட டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகும் என்று இன்று (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ள படக்குழுவினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த பான் – இந்தியா திரைப்படம் நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்கனவே ஏற்படுத்தி இருக்கின்றது.

திரைப்படம் குறித்து பேசிய AGS எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, “ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய திரை விருந்து காத்திருக்கிறது என்றும் தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணி அற்புதங்களை செய்து மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது என்றும் இதன் ஒரு சிறு பகுதியான டிரைலர் வரும் சனிக்கிழமை அன்று வெளியாகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கும் ‘கோட்’ திரைப்படம் விறுவிறுப்பும், பரபரப்பும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். பிரபு தேவா, மோகன், பிரசாந்த், அஜ்மல் அமீர், ஜெயராம், மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா மற்றும் யோகி பாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள கோட் திரைப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் 68வது படமான ‘GOAT ‘, அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்குமாம். இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களுக்காக தனது கடினமான உழைப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
தேசத்தின் பெருமையான சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள ‘கோட்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் எதிர்பார்ப்புகளை இன்னும் எகிற வைத்துள்ளது.
ரசிகர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து படைக்கும் வகையில் நிலையான மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் செப்டம்பர் 5 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘கோட்’ வெளியாகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here