மீண்டும் கனவருடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?..

0
145

விவாகரத்து வேண்டும், இருவரும் பிரிந்து வாழ போகிறோம் என்று இருக்கும் நடிகர் தனுஷ் அவர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான ஜஸ்வரியா அவர்களும் மீண்டும் இணைய போவதாக கிசுகிசு வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் அவர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், திரைப்பட இயக்குநருமான ஜஸ்வரியா அவர்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். பள்ளிப் படிக்கும் இந்த இருவரையும் ஜஸ்வரியாவும்,தனுசும் மிகுந்த அன்புடன் பார்த்து வருகின்றனர். இருப்பினும்  20 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்திருந்தனர். பின்னர் இவர்கள் சட்டபூர்வமான விவாகரத்து கோரி பரஸ்பரம் ஒப்புதலோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு ஒத்திவைப்பு

இந்த வழக்கு தற்போது முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையும் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இவர்கள் இருவரும் 7ஆம் தேதியான (நேற்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ,ருவரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதையடுத்து விவகாரத்து விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மீண்டும் இணைக்கிறார்கள்?

விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும், இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க உறவினர்களும், நண்பர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டு இருவரும் ஆஜராகவில்லையா என்று தெரியவில்லை. மற்றொரு பக்கம் ஜஸ்வரியாவும்,தனுசும் மீண்டும் இணைந்து வாழ போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here