கோவை சரளா 60 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க இதுதான் காரணம்!

0
75

This is the reason why Kovai Sarala is not married : தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சிய காலத்தில் நகைச்சுவையில் பெண்களும் பின்னி பெடலெடுப்போம் என்று நிரூபித்தவர் மனோரம்மா.

அவருக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப யார் வரப்போகிறார் என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்து வந்த நிலையில், அந்த இடத்திற்கு கச்சிதமாக பொருந்தினார் நடிகை கோவை சரளா.

தமிழ் சினிமாவில் கௌண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் ஆதிக்கம் செலுத்திய நேரத்தில் சத்தமே இல்லாமல் என்ட்ரி கொடுத்து சரவெடியாய் தனது நகைச்சுவையால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார் கோவை சரளா.

This is the reason why Kovai Sarala is not married

விவேக், வடிவேலு, கவுண்டமணி செந்திலுடன் இவரின் நகைசுவை காம்போ இன்றும் மக்கள் தங்களை மறந்து சிரிக்கும் நகைச்சுவையாக இருந்து வருகிறது.

இதுவரை மொத்தம் 900 படங்களில் நடித்து இருக்கும் கோவை சரளா ஹீரோயினியாக 15 படத்தில் நடித்துள்ளார். கோவை சரளா எம்ஜியாரின் தீவிர ரசிகை, அவரை பார்த்து தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததாக பேட்டி ஒன்றில் அவரே கூறியிருந்தார்.

தமிழ் சினிமாவில் இன்று வரை தனது காமெடியால் ரசிகர்களை மகிழ செய்து வரும் நடிகை கோவை சரளாவுக்கு வயது 60 க்கும் மேல் ஆகிவிட்டது. இன்று வரை அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி பல வருடங்களாகவே இருந்து வருகிறது.

மேலும் அவர் திருமணம் செய்து கொள்ளாததுபற்றி பல வதந்திகள் பரவி வருகிறது. தற்போது கோவை சரளா அந்த வதந்திகளுக்கு தனது பதில் மூலம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

திருமணம் செய்துகொள்ளாதது குறித்து அவர் பேசும் போது, ‘நாம் பிறக்கும் போது தனியாகத்தான் பிறக்கிறோம், அதே போல இறக்கும் போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் தேவை இல்லை என எனக்கு தோன்றியது, நான் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக திருமணம் செய்துகொள்ளவில்லை என்று சொன்னார்.

மேலும் அவர் கூறும் போது, “திருமணம் நடந்து குழந்தைகள் பெற்றுக்கொண்ட பல பெற்றோர்கள் இன்று அந்த குழந்தைகள் கைவிட்டதால் தங்களது வாழ்க்கையை தனியாக வாழ்ந்து வருகின்றனர், எனக்கு யாரையும் சார்ந்து வாழ பிடிக்கவில்லை” என்று தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை போட்டு உடைத்து உள்ளார் கோவை சரளா.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here