“அதுக்குள்ள படமே முடிஞ்சிருச்சா?”… த.வெ.க தலைவர் விஜய் மகன் இயக்கிய புதிய படம்

0
87

த.வெ.க கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

மாநகரம், ராயன் படத்தில் அசத்திய சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நாயகி குறித்த தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்ல.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு பிரவின் கே.எல். படத்தொகுப்பு செய்கிறார்.

விரைவில் படம் வெளியாகுமெனவும் தமிழ், தெலுங்கில் வெளியாகுமெனவும் இந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் அவர்களின் மகன் சஞ்சய் போக்கிரி, வேட்டைக்காரன் ஆகிய படங்களில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் சிறிது நேரம் தோன்றியிருப்பார். அவர் நடிகராக அறிமுகமாவார் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here