சின்ன நம்பர் நடிகை ராசி இல்லை: பெரிய நம்பர் நடிகைக்கு திமிரு… இளம் நாயகிகளை தேடும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்….

0
31

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை அந்த சின்ன நம்பர் நடிகையும், அந்த பெரிய நம்பர் நடிகையும்  தான் ஆக்கிரமித்து இருந்தார்கள். இந்த இரண்டு நம்பர் நடிகைகள் நடிக்கும் படங்கள் தான் மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்தன. அந்த அளவுக்கு இந்த இரண்டு நடிகைகளும் புகழின் உச்சியில் இருந்தார்கள்.

முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் விக்ரம், சூர்யா என பல நடிகர்களுடன் இந்த சின்ன நம்பர் நடிக்கையும், பெரிய நம்பர் நடிகையும் தான் மாறி,மாறி நடிப்பார்கள். இதற்காக கோடிக்கணக்கில் இருவரும் சம்பளம் வாங்கிக் கொண்டார்கள்.

இந்த இரண்டு நடிகைகளின் அம்மாக்கள் வேற பல கண்டிஷன் போடுவார்களாம். இந்த இரண்டு நம்பர் நடிகைகளை தங்கள் படத்திற்கு ஓகே செய்தால் தான் படம் ஹிட் ஆகும் என விநியோகஸ்தர்கள் சொல்லிவிட்டார்கள். அதனால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களுக்கும் வேறு வழி இல்லாமல் இந்த இரண்டு நம்பர் நடிகைகளை தான் நம்பி இருந்தார்கள்.

ஆனால் காலம் மாற, மாற இந்த இரண்டு நம்பர் நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் குறைய தொடங்கி விட்டது. இரண்டு நம்பர் நடிகைகளும் மாறி, மாறி புகழின் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே அடுத்தடுத்து புதிய இளம் கதாநாயகிகள் தமிழ் சினிமாக்கு வர தொடங்கிவிட்டார்கள். தற்போது இளம் கதாநாயகிகள் தான் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துள்ளார்கள். உச்ச நட்சத்திர நடிகர்கள் கூட இளம் கதாநாயகிகளுடன் நடிக்க தான் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.

அதனால் இந்த இரண்டு நம்பர் நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டதாம். தற்போது கூட சின்ன நம்பர் நடிகை முன்னணி நடிகருடன் இணைந்து நடித்த படமும் வெற்றி பெறவில்லை. காரணம் இந்த சின்ன நம்பர் நடிகையின் ராசி தான் என்று தயாரிப்பாளர்கள்; ரசிகர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதேவேளையில் அந்த பெரிய நம்பர் நடிகைக்கு தற்போது திமிர் அதிகமாகிவிட்டது. அதனால் தங்கள் படங்களுக்கு போட வேண்டாம் என தயாரிப்பாளர்கள் பேசுகிறார்களாம்…. எது எப்படியோ இந்த இரண்டு நம்பர் நடிகைகளுக்கும் தற்போது நேரம் சரியில்லை என கோலிவுட் வட்டாரத்தில் கிசு, கிசுக்கப்படுகிறது….

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here