Simbu and Kamal: காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என்று புலம்பிய வாறு சிம்பு ஏறத்தாழ பல மாதங்களாக கமலை எதிர் பார்த்து கொண்டிருந்தார். அதாவது STR 48 வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாகவும். இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. அந்த வகையில் பஸ்ட் போஸ்டர் ரிலீசான நிலையில் படத்தின் பட்ஜெட் சுமார் 250 கோடி வரை தாண்டும் என்று கூறப்பட்ட நிலையில் கமல் இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று மௌனமாகவே இருந்தார்.

சிம்பு எத்தனையோ முறை கமலிடம் இதைப் பற்றி கேட்டுக்கேட்டு அலுத்து போய்விட்டார். அதனால் இனியும் அவரை நம்ப முடியாது என்று வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பதிலை அளிக்குமாறு கேட்டிருக்கிறார். அதற்கு கமல் அதிக பட்ஜெட்டில் என்னால் செலவு செய்ய முடியாது என்று கஞ்சித்தனத்தை காட்டி பெரிய நாமத்தை சிம்புவுக்கு போட்டுவிட்டு இப்படத்திலிருந்து விலகி கொண்டார்.
சிம்புவை ஆசை காட்டி மோசம் செய்த கமல்
இதனால் வேறு வழி இல்லாமல் சிம்பு என்ன செய்வது என்று யோசித்த நிலையில் தன் மகனுக்கென்று ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உஷா மற்றும் டி ராஜேந்திரனின் கம்பெனியாக உள்ள ஆத்ம சிலம்பரசன் டிஆர் நிறுவனத்தின் வாயிலாக இப்படத்தை தயாரிக்கலாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.
தற்போது இவர்கள் தயாரிக்கும் இப்படத்தின் பட்ஜெட் 200 கோடி என்று தீர்மானிக்கப்பட்டுஉள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஆரம்பித்து விடலாம் என்று முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் சிம்புக்கு இணையாக கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி உள்ளார்.
ஆக மொத்தத்தில் கமலுக்காக இவ்வளவு நாள் காத்துக் கிடந்த சிம்புவுக்கு எல்லாமே வேஸ்ட் என்கிற போல இதுவரை வேறு எதிலும் கமிட் ஆகாமல் இருந்துள்ளார். இது ஏற்கனவே கமல் முடிவு செய்த நிலையில் தான் சிம்புவை பகைத்து கொள்ளக் கூடாது என்பதற்காக ஒரு சப்பக்கட்டாக தான் அவர் நடிக்கும் தக் லைப் படத்தில் சிம்புக்கு ஒரு கதாபாத்திரத்தை அளித்து இருக்கிறார். சிம்புவுக்கு ஆண்டவரைப் பற்றி தெரியாமல் ஆசையுடன் காத்திருந்து மோசம் போனார்.
ஆனாலும் கமல், சிம்புவை நிராகரித்ததற்கான காரணம் தற்போது இவருக்கு சொல்லும் அளவிற்கு மார்க்கெட் எதுவும் இல்லை. அத்துடன் சிம்பு நடிப்பில் வெளியான படங்களும் பெரிய லாபத்தை ஈட்டவில்லை. அடுத்து கமலுக்கும் இந்தியன் 2 படத்தில் மிகப்பெரிய இடி விழுந்ததால் இப்போதைக்கு பெரிய ரிஸ்க் எடுக்க போவதில்லை என்று ஒதுங்கி விட்டார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டாவது சிம்பு நடிப்பில் STR48 படம் வெளியாகுமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here