கோலாகலமாக நடக்க உள்ள ஐஸ்வர்யா-உமாபதி திருமணம்- ஒரு பத்திரிக்கையின் மதிப்பு இத்தனை ஆயிரமா?

0
159

ஐஸ்வர்யா-உமாபதி

90களில் நாம் பார்த்து ரசித்த புகழ்பெற்ற வாரிசுகள் பலர் சினிமாவில் வந்து கொண்டு இருகிறார்கள்.

ஒரு சில நடிகர்களின் வாரிசுகளுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து வருகிறது.

அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்களின் திருமணம் வரும் ஜுன் மாதம் மிகவும் கோலாகலமாக நடக்க இருக்கிறது.

பத்திரிக்கை

திருமணத்திற்கான முதல் பத்திரிக்கையை அர்ஜுன் மற்றும் தம்பி ராமைய்யா குடும்பத்துடன் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளார்கள்.

ஜுன் 10ம் தேதி கெருகம்பாக்கத்தில் பல ஏக்கர் பரப்பளவில் அர்ஜுன் வாங்கி வைத்துள்ள தோட்டத்தில் தான் ஐஸ்வர்யா-உமாபதி திருமணம் நடக்க போகிறதாம்.

திருமண பத்திரிக்கையினை பாக்ஸ் போன்று பிரத்யேகமான வடிவைப்பில் செய்துள்ளனர், அந்த ஒரு பத்திரிக்கையின் விலை சுமார் ரூ. 5,000 இருக்கும் என சொல்லப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here