GOAT ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? தரமான அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு

0
198

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று அசால்டாக அப்டேட் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. GOAT படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை மெர்சல் ஆகி இருக்கிறார்.

GOAT படத்தின் ஏதவாது ஒரு அப்டேட் கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரம்ஜான் திருநாளான இன்று சும்மா மாஸ்ஸாக ஸ்பெஷல் அப்டேட் ஒன்றை கொடுத்து உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது ஃபர்ஸ்ட் லுக் போன்ற எதாவது ஒரு அப்டேட் வரும் என்று எதிரிபார்த்து இருந்தனர். ஆனால் தற்போது அட அது எல்லாம் இல்லப்பா என்கிற சொல்கின்ற மாதிரி வெங்கட் பிரபு அப்டேட் ஒன்றை கொடுத்து இருக்கிறார்.

ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கின்றனர், ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக அஜித் யின் ஷூட்டிங் சீன் லீக் ஆகி தமிழ் சினிமா ரசிகர்களை ஷாக் ஆகியது. மேலும் மற்ற ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் GOAT அப்டேட் வருமா என்று காத்து கொண்டு இருந்தனர்.

தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகி ஹிட் ஆன நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நம்ம தளபதி விஜய் நடிக்கும் GOAT திரைப்படம் செப்டம்பர் மாதம் 5 தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.

செப்டம்பர் மாதம் 5 தேதி வியாழன் கிழமை உலக முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் GOAT திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் 20 ஆண்டுகள் கழித்து தளபதி விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்து இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இப்படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா என பல நட்சத்திர பட்டாளங்களை ஒட்டுமொத்தமாக திரையில் பார்ப்பதற்கு சினிமா ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here