டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகும் கவர்ச்சி நடிகை: சின்னத்திரை ரசிகர்கள் குதூகலம்…!

0
55

பிரபல தமிழ் சினிமா நடிகர் கவர்ச்சி நடிகை மான வெற்றிகரமாக ஒளிபரப்பாய் கொண்டிருக்கும் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக வர உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் மாஸ் ஹீரோவாக நடித்து புகழ்பெற்ற நடிகர் சரத்குமார் அவர்கள் இன்றும் அவர் தொடர்ந்து பல்வேறு பிணக்கித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது மகள் நடிகை வரலட்சுமி.

நடிகர் சிலம்பரசன் அவர்களின் “போடா போடி” என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. அதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் “தாரை தப்பட்டை” படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த நடிகையாக ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தெலுங்கு; கன்னடம் என பல்வேறு மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு வரலட்சுமி அவர்களின் நடிப்பில் “மத கத ராஜா” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை வரலட்சுமி அவர்களுக்கு சமீபத்தில் சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜீ தமிழ் டிவியில் வரலட்சுமி:-

தற்போது எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதுவும் வேறு எந்த சேனல் இல்லை ஜீ தமிழில் தான். ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வரலட்சுமி கலந்து கொள்வதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.

இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் பாபா மாஸ்டர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வந்தனர். இந்த நிலையில் இப்போது சங்கீதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக வரலட்சுமி சரத்குமார் நடுவராக அறிமுகமாக இருக்கிறார். சமீபத்தில் தான் ஜீ தமிழில் மகா நடிகை நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து விரைவில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது.

நடுவராக வரலட்சுமி சரத்குமார் புதியதாக அறிமுகமாகிறார். அதேபோல இந்த நிகழ்ச்சியை இதுவரைக்கும் ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்கி வந்த நிலையில் வி.ஜே மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறி இருக்கிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here