வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பானது மதுரையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய படங்களை தமிழ் சினிமாவில் தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் தான் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய தங்கலான்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவரப்போகிறது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் எஸ்.யு. அருண் குமார் விக்ரமின் 62-வது படத்தை இயக்குகிறார். இவர் இப்படத்திற்கு முன்பு பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா என்ற படங்களை இயக்கி உள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசரானது சமீபத்தில் வெளியானது. வீர தீர சூரன் (பாகம்-2) என இப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் ஒரு அதிரடி படமாக உருவாகி வருகிறது. இதன் ஷூட்டிங் மதுரை கிராம பகுதியில் நடந்து வருவதால் படப்பிடிப்பை காண பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கிராமத்துக் கதையில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்துக்கு இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here