விமர்சனங்களை அள்ளி வீசும் பயில்வான் வாயிலிருந்து வந்த நல்ல தகவல்.. அந்த அதிர்ஷ்ட நடிகை யார்?

0
279

விமர்சகர் பயில்வான் சுவலட்சுமி பற்றி யாமறியாத பல தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

சுவலட்சுமி

கடந்த1994 ஆம் வருடம் பெங்காலியில் வெளியான “உத்தோரன்” என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர் தான் சுவலட்சுமி.

இதனை தொடர்ந்து மணிரத்னத்தின் மூலம் இயக்குனர் வசந்த் இயக்கிய வெளியான “ஆசை” படத்தில் அஜித்துக்கு இணையாக நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே நினைத்து பார்க்க முடியாத அளவில் வெற்றியை சந்தித்தார். இதனால் சுவலட்சுமிக்கு படவாய்ப்புகள் அதிக அளவில் குவிய ஆரம்பித்தது.

அந்த காலக்கட்டத்தில் சுவலட்சுமி கவர்ச்சியை மறுத்து குடும்ப பாங்கான திரைப்படங்களில்மட்டும் நடித்து வந்தார்.

சினிமாவில்உச்ச நடிகையாக வலம் வந்த சுவலட்சுமி கடந்த 2001ஆம்வருடம் விஞ்ஞானி ஸ்வகாடோ பானர்ஜியை திருமணம் செய்துகொண்டு சுவிட்சர்லாந்தில் குடி அமர்ந்தார்.

பயில்வான் கூறிய தகவல்

சுவலெட்சுமி திருமணத்திற்கு பின்னர் சினிமா பக்கமிருந்து முற்றிலுமாக விலகியது குறித்து யாமறியாத பல தகவல்களை பயில்வான் முதல் முறையாக பாராட்டி பேசியுள்ளார்.

அதன்படி, சுவலட்சுமி முன்னணியில் வலம் வந்து கொண்டிருந்த காலப்பகுதியில் பல பிரபலங்கள் சுவலட்சுமியை காதலித்தார்கள். ஆனால் யாருக்கும் அவர் மயங்கவில்லை.

ஹீரோயினியை கவர்ச்சியாக காட்டும் திரைபடங்களுக்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அக்காலத்தில் ஒழுக்கமுடன் இருந்த நடிகைகளில் சுவலட்சுமியும் ஒருவர்.” என பேசியுள்ளார்.

இப்படி பயில்வான் வாயிலிருந்து பாராட்டி வந்த செய்திகளை ரசிகர்கள் அதிர்ச்சியாக பார்த்துள்ளனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here