விஜய்க்கு நல்ல மனசு.. பிரஷாந்தின் வாழ்க்கை.மாறிவிடும் தியாகராஜன் நெகிழ்ச்சி

0
237
Vijay has a good heart said Thiagarajan
Vijay has a good heart said Thiagarajan

Vijay has a good heart said Thiagarajan : The Greatest of All Time படத்துக்குப் பின் நடிகர் பிரஷாந்த் சினிமா வாழ்க்கை வேறு இடத்துக்கு செல்லப்போகிறது என்று அவரது அப்பாவும், இயக்குநருமான தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரசாந்த் டாப் ஸ்டார் என கொண்டாடப்படுபவர். வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் எண்ட்ரீ கொடுத்த அவர் இன்று பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் மறக்க முடியாத நடிகராக திகழ்கிறார். ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கே சவால் கொடுக்கும் நிலையில் திகழ்ந்த பிரஷாந்தை ஸ்கிரீனில் பார்க்க முடியவில்லை என பலரும் வருத்தப்படவே செய்கிறார்கள். அப்படி வருத்தப்பட்டவர்களுக்கு தான் இனிப்பான செய்தி காத்திருந்தது.

Vijay has a good heart said Thiagarajan
Vijay has a good heart said Thiagarajan

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள The Greatest of All Time படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிரஷாந்த் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானபோதே ரசிகர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. இந்த படத்தில் பிரபுதேவா, சினேகா, லைலா என 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான நடிகர், நடிகைகள் இடம் பெற்றுள்ளனர்.

The Greatest of All Time படத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி “விசில் போடு” பாடல் ரிலீசானது. இந்த பாடலை மதன் கார்க்கி எழுதி, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க விஜய் பாடியிருந்தார். இதன் வரிகள் அடங்கிய வீடியோவின் கடைசியில் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா போன்றோர் பட்டையை கிளப்பும் வகையில் நடனம் ஆடியிருப்பார்கள். குறிப்பாக பல நாட்களுக்கு பிறகு பிரஷாந்தை திரையில் பார்த்ததில் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரஷாந்தின் அப்பா தியாகராஜன், “கோட் படத்தில் பிரஷாந்த் நடனம் ஆடியது ரொம்ப ஈர்த்தது. படத்தில் அவருக்கு சமமான ஒரு கதாபாத்திரம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், டான்ஸ் ஆடுவதில் கூட அந்த சமநிலையை கொடுத்தற்கு விஜய்க்கு ஒரு நல்ல மனசு இருக்கிறது. நான் அந்த விஷயத்தில் அவரை பாராட்டுகிறேன். கதை சொல்லும்போதே விஜய்க்கு சமமான ஒரு கேரக்டர் தான் என பிரஷாந்துக்கு கூறியிருந்தார்கள்.

Vijay has a good heart said Thiagarajan

பிரஷாந்த் சிறு வயதிலேயே பரதநாட்டியத்தை கற்றுக்கொண்டார். அதனால் தான் பிரசாந்த் க்கு அந்த நளினங்கள் மிக எளிதாக வரும். அப்படித்தான் ஆணழகன் படத்திலும் பரதநாட்டியத்தை ஆட வைத்திருப்பேன். அந்த வகையில் பிரஷாந்த் நடித்து வரும் கோட் படம் மிகப்பெரிய வெற்றி பெரும். வெங்கட் பிரபுவுக்கு என ஒரு ஸ்டைல் இருக்கிறது. இந்த படத்தை பெரிய அளவில் ஏஜிஎஸ் நிறுவனம் செய்கிறது. எதுக்கும் யோசிக்காமல் செலவு செய்கிறார்கள். கோட் படத்துக்கு பின் பிரஷாந்த் பெரிய பெரிய படங்களில் நடிக்கப்போகிறார்” என தெரிவித்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here