இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் நபராக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி ஏறத்தாழ 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி என்ற டுவின்ஸும், ஆனந்த் அம்பானி என்னும் இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு ஜூலை 12ம் தேதி கல்யாணம் நடைப்பெற்றது.

முன்னதாக, இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் ஒருவரான வீரன் ஏ. மெர்ச்சந்த் என்ற வைர வியாபாரி.அவரது மகள் ராதிகா மெர்ச்சந்த்தை சில வருடங்கள் காதலித்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். இந்த Pre Wedding நிகழ்ச்சியானது குஜராத்தின் ஜாம் நகரிலுள்ள அம்பானியின் வீட்டில் நடைபெற்றது. இத்திருமணத்தில், அரசியல் தலைவர்கள், உலக புகழ் பெற்ற தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களும் பங்கேற்றார்கள். தற்போது, இந்தியாவின் ஹார்ட் டாப்பிக்காகவே மாறும் லெவலுக்கு இவர்களது கல்யாண கொண்டாட்டங்கள் பேசுபொருளாக இருக்கிறது.
இந்த திருமணத்திற்காக அம்பானி சுமார் 5 ஆயிரம் கோடி வரை செலவு செய்துள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. அதோடு, திருமணத்திற்கு வந்த பிரபலங்களுக்கு ரிட்டன் கிப்டாக 2 கோடி மதிப்பிலான வாட்ச் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நடிகை டாப்ஸி பேட்டி ஒன்றில் அம்பானி மகன் திருமணத்தில் பங்கேற்று கொள்ளாதது குறித்து கூறியுள்ளார்.

அதில் அவர் பேசும் போது, எனக்கு அம்பானி குடும்பத்தினர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர்களது குடும்பத்தாருடன் எனக்கு தொடர்பு இல்லை. திருமணம் என்பது உறவுகளுடன் சேர்ந்தது, விருந்து அளிக்கும் குடும்பத்தினருக்கும் விருந்தினர்களின் குடும்பத்திற்கும் மத்தியில் ஒரு பந்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது போல இருக்கும் திருமணங்களுக்கு தான் நான் செல்வேன் என்று கூறியுள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here