டிஆர்பி ரேட்டிங்கை 6 சீரியல்கள் தலைகீழாக மாற்றிய .. விஜய் டிவியின் ஆட்டநாயகன் சீரியல் சிங்கபெண்ணே சீரியலை பின்னுக்கு தள்ளியது

0
176

This week top 6 Trp Rating: ஒவ்வொரு வாரமும் வெள்ளித்திரையில் எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும் தினமும் வீட்டில் உள்ளபடியே பார்க்கும் சீரியலுக்கு எப்போதுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை கொண்ட சீரியல்கள் தற்போது ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து பார்க்கும் படியாக நேரத்தை செலவு செய்கிறார்கள்.

அதனால் சீரியல் மூலம் டிஆர்பி ரேட்டிங்கை கூடுதலடைய செய்ய வேண்டும் என்பதற்காக சில சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு புது புது நாடகத்தை போட்டு வருகிறார்கள். அப்படி எத்தனை சேனல்கள் வந்தாலும் அசைக்க முடியாத இடத்தில் நம்பர் ஒன் ஆக இருப்பது சன் டிவி தான். ஆனால் இந்த வாரம் அந்த சன் டிவியை ஆட்டம் காண செய்து விட்டது விஜய் டிவி. அதை குறித்து தற்போது பார்க்கலாம்.

சன் டிவிக்கு விஜய் டிவி கொடுத்த முதல் அடி

அதாவது 6 வது இடத்தில் கடந்த 2 வாரங்களாக இருந்த மல்லி சீரியல் தற்போது 7 வது இடத்திற்கு சென்று விட்டது. அதற்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியல் 7.12 புள்ளிகளை வாங்கி 6 வது இடத்திற்கு சென்று விட்டது. இதற்கு முக்கிய காரணம் ராதிகா மற்றும் கோபிக்கு மத்தியில் உண்டான விரிசல், மனவேதனையில் தவித்து கொண்டுள்ள ஈஸ்வரி, இவரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று போராடும் பாக்யாவின் முயற்சி ஆகிய விஷயங்கள் பரபரப்பாக இருந்து வருகிறது.

அடுத்ததாக5 வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வானத்தைப்போல சீரியல். கதை இருக்கோ இல்லையோ அண்ணன் தங்கையின் பாசத்தை கொண்டு பல ஆண்டுகளாக உருட்டி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 7.50 புள்ளிகளை பெற்று 5 வது இடத்தில் இருக்கிறது. புதுசாக ஒரு குடும்பத்தை அழைத்து வந்து வேற ஒரு டிராக்கு கதை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

இதனை அடுத்து கடந்த மாதம் புதிதாக மருமகள் சீரியல் ஒளிபரப்பாகியது. இந்த மருமகள் சீரியல் 7.58 புள்ளிகளை பெற்று 4 வது இடத்தில் இருக்கிறது. மோதலில் ஆரம்பிக்கும் சண்டை காதலில் தான் முடியும் என்ற சொல்வதற்கு ஏற்ப ஆதிரை மற்றும் பிரபுக்கும் திருமணம் நடக்கப்போகிறது.

அடுத்ததாக பல ஆண்டுகளாக கயலை துரத்தி துரத்தி லவ் பண்ணிய எழிலுக்கு தற்போது தான் ஒரு விடிவு காலம் வந்தது போல கயலுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் கயல் கொஞ்சம் கொஞ்சமாக எழிலை விட்டு பிரிந்து வருகிறார். இதில் தனது பெரியப்பாவின் சூழ்ச்சி வலையில் சிக்கி கொண்ட மூர்த்தி குடும்பத்தை அடமானம் வைத்து விட்டார். இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் கயல் சீரியல் இந்த வாரம் 8.08 புள்ளிகளை பெற்று 3 வது இடத்தில் இருக்கிறது.

இதனை அடுத்து சிங்க பெண்ணே சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இப்பொழுது வரை முதல் இடத்தை பெற்று வந்தது. ஆனால் தற்போது இந்த இடத்திற்கு போட்டி போட்டு கொண்டு விஜய் டிவி ஆட்டநாயகனாக மின்னிக்கொண்டிருக்கும் முத்துவின் சிறகடிக்கும் ஆசை சீரியல் முதல் இடத்தை பெற்று விட்டது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்கும் ஆசை 8.38 புள்ளிகளை வாங்கி சிங்கபெண்ணே சீரியலை பின்னுக்கு செல்ல வைத்துவிட்டது. இதனால் இந்த வாரம் 8.27 புள்ளிகளை பெற்று 2 வது இடத்தில் சிங்க பெண்ணே சீரியல் வந்திருக்கிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here