மீண்டும் மிரர் செல்பி.. முன்னணி கதாநாயகனுடன் ஸ்பெயின் பறந்து போகும் த்ரிஷா..!

0
118

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக தடம்பதித்த திரிஷா முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் மங்காத்தா போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது 40 வயதாகும் திரிஷா சற்றும் இளமை மாறாமல் அதே அழகோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து அவரின் அழகை கண்டு மயங்கிய நடிகர்கள் பல பேர் அவரை காதலித்துள்ளனர்.

முன்னதாக, தமிழ் சினிமாவில் திரிஷா அறிமுகமாக 22 ஆண்டுகளுக்கு மேலாக அவர் முன்னணி கதாநாயகியாக இருப்பது மிகப்பெரிய விஷயம் என அவரது ரசிகர்கள் சொல்வது உண்டு. விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்த நடிகை திரிஷா அடுத்து விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறார்.அண்மை காலமாக த்ரிஷா குறித்து பல்வேறு கிசு கிசுக்கள் வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக அவரை முன்னணி கதாநாயகனான விஜய்யுடன் இணைத்துவரும் கிசுகிசுக்கள் சர்ச்சைகளை உண்டாக்கி வருகிறது.

விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்த த்ரிஷா அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தனின் ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் The Bull என்ற திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருக்கிறார். விரைவில் அதன் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் தொடங்க இருக்கிறது. அதில், கலந்துகொள்ள சல்மான் உடன் த்ரிஷாவும் செல்ல இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரிஷா மீண்டும் படு பிஸியாக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, த்ரிஷா ஒரு மிரர் செல்ஃபியை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here