ஏன் சீரியலில் நடிக்கவில்லை? நடிகை காவியா அறிவுமதி ஓபன் டாக்!..

0
58

பரத் பாரதி கண்ணம்மா பாண்டியன் ஸ்டோர் போன்ற விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தான் காவியா அறிவுமதி.

பின்னர் சீரியலில் இருந்து சினிமா வாய்ப்பை பெற்ற காவ்யா, 2022ஆம் ஆண்டு ‘மிரள்’, 2023ஆம் ஆண்டு ‘ரிப்பப்பரி’ ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.

தற்போது நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடித்த ‘நிறம் மாறும் உலகில்’ படத்திலும் நடித்துள்ளார் அடுத்ததாக கவின் – நயன்தாரா நடிக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தனது சினிமா வாய்ப்பு பற்றி நடிகை காவியா அறிவமதி கூறியதாவது:

சினிமா பின்னணி இல்லாமல், சென்னைக்கு தனியாக வந்தேன், நிறைய முயற்சித்தேன். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு யூடியூப்பில் சில குறும்பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்பிறகு, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வாய்ப்பு கிடைத்தது, பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸில் முக்கிய வேடத்தில் நடித்தேன்.

சீரியல்களில் நடிக்கும் போது பட வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் தேதி பிரச்னைகள் காரணமாக அவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது ரிஸ்க் எடுத்து சீரியலில் இருந்து விலகவில்லை என்றால் ஒரு பெட்டிக்குள் சிக்கிக்கொள்வது போல் ஆகிவிடும் என எண்ணி, சீரியிலில் விலகி சினிமாவில் எண்ட்ரி ஆனேன்.

டிவி தொடர்களில் இருந்து திரைப்படங்களுக்கு மாறுவது எளிதானது அல்ல, ஏனெனில் நீங்கள் பொருளாதார ரீதியாக நிறைய போராட்டங்களைச் சந்திப்பீர்கள். படங்களில் நடிக்க, நாம் நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும், அதற்கு நமக்கு பணம் தேவை. சீரியலில் நடிக்கும்போது கொஞ்சம் பணத்தைச் சேமித்து வைத்திருந்தேன், அதன் மூலம் என்னை நானே வளர்த்துக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here